வரலாற்றில் முதல் தடவையாக 27 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் 3 மாத காலங்களுக்கு இந்த நிவாரணம் வழங்கப்பட்வுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தண தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லங்கா சதொச, கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்கள், கியு-ஷொப் விற்பனையகங்கள் ஊடாக குறித்த நிவாரண விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.