குவைத்தின் மன்னராக செயற்படுகின்ற செய்க் சபா அல் அஹமட் அல் சபா நேற்று தனது 91 ஆவது வயதில் காலமானார். செய்க் சபா 2006 ம் ஆண்டு முதல் குவைத்தை நிர்வகித்துள்ளதுடன் அமெரிக்க சார்பான கொள்கையின் கீழ் தனது கொள்கைகளை அமுல்படுத்தினார். முடிசூடவுள்ள அவரது சகோதரரான செய்க் நவாப் அல் அகமட் அல் சபா அடுத்த மன்னராக பெயரிடப்பட்டுள்ளார். செய்க் சபாவின் ஆட்சிக்காலத்தில் சவுதி அரேபியாவுடனும் தீவிர நட்புறவை பேணியதுடன் குவைத்தில் எரிபொருள் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கும் முடிந்தது.