70 வது தேசிய தின நிகழ்வில் சீனா புதிய ஏவுகணையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் இது அமெரிக்காவை இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அணிவகுப்புக்கென அதி நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய தயாரிப்புக்கள் பல இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
1949 அம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி மவோ சேத்துன்னின் தலைமையிலான கம்யூனிஸ்ட் சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டது. அத்துடன் ஹொங்கொங் நாட்டிலும் சீன தேசிய தினத்தையொட்டி பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.