தற்போது காணப்படும் மழையுடனான வானிலை இன்றிலிருந்து அதிகரிக்க கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் வடக்கு, வடமத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான ஓரளவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும். சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் . இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.