ரம்பே -மெல்சிறிபுர வீதியில் பன்சியகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மின்கம்பமொன்றில் மோதியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்றிரவு விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்திய மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். கலடன்வௌ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய மாணவரே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.