அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கிடையில் மேலுமொரு சந்திப்பை அடுத்த மாதம் மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 11 ம் திகதி பெரிஸ் நகரில் இடம்பெறவுள்ள முதலாவது உலகப்போரின் 100 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெறும் வைபவத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் கலந்துகொள்ளவுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையில் சந்திப்பொன்றை மேற்கொள்ள ரஷ்ய ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பொல்டன் மொஸ்கோ நகரில் சந்தித்த போதே இந்த இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளார். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கை காரணமாக ரஷ்ய மற்றும் அமெரிக்காவுக்கிடையில் கருத்து பேதங்கள் நிலவுகின்றன. இதுதொடர்பாக கலந்துரையாடுவதற்கே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.