அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து இவ் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இவ் ஒப்பந்தத்தின் மூலம் ஒரு ரில்லியன் டொலர் பெறுமதியான வர்த்தக கொடு;க்கல் வாங்கல்கள் இடம்பெறவுள்ளன. வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என அழைக்கப்படும் இவ் ஒப்பந்தத்தில் பிரதானமாக அமெரிக்காவில் கனடா பால் பண்ணை தொழிலில் ஈடுபடுவதற்கும் கனடா அமெரிக்காவுக்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்குமான வழி வகைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.