சூப்பர் ஸ்டாரின் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான பாடல் மற்றும் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் வருகிற 28-ஆம் திகதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதற்கிடையில் வெளிநாடுகளில் பிரீமியர் காட்சிகள் 9-ம் திகதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 10-ம் திகதியே படம் வெளியாவது உறுதியாகி உள்ளது.