Back to homepage

Tag "Wild Fire"

அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு : உலகச் சுகாதார நிறுவனம்

அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்பு : உலகச் சுகாதார நிறுவனம் 0

🕔14:26, 1.செப் 2019

அமேசன் காட்டுத் தீயினால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதென உலகச் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் சுகாதாரப் பிரச்சினைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக சிரமம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. கடுமையான தீயால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாசு கலந்த காற்று அதிகநாட்டுகளுக்கு இருக்குமென சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை தீயால்

Read Full Article
அமேசன் காட்டுத்தீயை அணைக்க ஜி – 7 நாடுகளின் உதவி தேவையில்லை : பிரேசில்

அமேசன் காட்டுத்தீயை அணைக்க ஜி – 7 நாடுகளின் உதவி தேவையில்லை : பிரேசில் 0

🕔13:20, 27.ஆக 2019

அமேசன் காடுகளில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க 22 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுமென ஜி – 7 அமைப்பில் உள்ளடங்கும் நாடுகள் அறிவித்துள்ளன. எனினும் தமக்கு ஜி – 7 நாடுகளின் உதவி தேவையில்லையென பிரேசில் அறிவித்துள்ளது. உலகில் மிகப்பெரிய மழை காடான பிரேசிலில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் பரவிவரும் தீயினால் உலக நாடுகள்

Read Full Article
அமேசன் காட்டுத்தீயினால் அரியவகை பாம்புகள் அழிவடையும் அபாயம்

அமேசன் காட்டுத்தீயினால் அரியவகை பாம்புகள் அழிவடையும் அபாயம் 0

🕔18:38, 25.ஆக 2019

அமேசன் காட்டுத்தீயினால் அரியவகை பாம்புகள் அழிவடையும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில பாம்புகள் வாழ்விடங்களை விட்டு வெளியேறுதாகவும், பல வகையான பாம்புகள் அழியும் நிலையில் இருப்பதாகவும் வன உயிரின ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அமேசான் காடு பிரேசில், கொலிம்பியா, வெனிசுலா, பொலிவியா, கயானா, பிரெஞ்ச் கயானா உள்ளிட்ட நாடுகளை சுற்றி காணப்படுகிறது. குறித்த காட்டில்

Read Full Article
அமேசன் காடுகள் வழியாக பயணிகள் விமானங்கள் செல்லத் தடை

அமேசன் காடுகள் வழியாக பயணிகள் விமானங்கள் செல்லத் தடை 0

🕔13:09, 24.ஆக 2019

அமேசன் காடுகள் வழியாக பயணிகள் விமானங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மழைக்காடான அமேசன் பிரேசில், வெனிசுவேலா, கொலம்பியா, பொலிவியா உள்ளிட்ட பல நாடுகளை சுற்றியுள்ளது. பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படும் அமேசான் காடுகளில் அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகள் உட்பட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக அமேசான் காடுகளில்

Read Full Article
அமேசன் காட்டுத்தீ தொடர்பில் ஜி 7 மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்து

அமேசன் காட்டுத்தீ தொடர்பில் ஜி 7 மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்து 0

🕔12:16, 24.ஆக 2019

அமேசன் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பில் ஜி 7 மாநாட்டில் விவாதிக்கப்படவேண்டுமென பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன. பிரான்ஸ் மற்றும் ஜேர்மனின் தலைமையில் இதுதொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. தற்போது அமேசன் காட்டில் ஏற்பட்டுள்ள தீயானது சர்வதேச நெருக்கடியென பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். துரித அவதானம் செலுத்தப்படவேண்டிய பாரிய பிரச்சினையாக இது அடையாளம் காணப்படவேண்டுமென ஜேர்மன்

Read Full Article
எல்ல காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கர் வனப்பிரதேசம் அழிவு

எல்ல காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கர் வனப்பிரதேசம் அழிவு 0

🕔14:49, 23.ஆக 2019

எல்ல வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக 20 ஏக்கர் வனப்பிரதேசம் அழிவடைந்துள்ளது. நேற்று மாலை ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுப்படுத்த முப்படையினர், தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். தீவிபத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதேவேளை மொனராகலை மரகல வனப்பகுதியிலும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

Read Full Article
கெலிபோர்னியாவில் கடும் காட்டுத்தீ

கெலிபோர்னியாவில் கடும் காட்டுத்தீ 0

🕔12:57, 10.ஆக 2018

கெலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்தும் காட்டுத்தீ பரவி வருவதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல தீக்கிரையாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வறட்சியான வானிலை மற்றும் கடும் காற்று வீசி வருவதால் தீயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள

Read Full Article
தீயினால் 4 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக நாசம்

தீயினால் 4 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக நாசம் 0

🕔12:21, 20.ஜூலை 2018

வெல்லவாய படகலகந்த கல்கொரியகம வனப்பகுதியில் பரவிய தீயினால் 4 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. இராணுவம் மற்றும் பிரதேச வாசிகள் இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article
வெல்லவாய மதுரகல வனப்பகுதி தீயில் 50 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளது

வெல்லவாய மதுரகல வனப்பகுதி தீயில் 50 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளது 0

🕔12:49, 6.ஜூலை 2018

வெல்லவாய மதுரகல வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவலினால் 50 ஏக்கர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளது. தொடர்ந்தும் தீ வேகமாக பரவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அறிவிப்புக்கமைய இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். எனினும் கடும் காற்றுடன் கூடிய வறட்சியான வானிலையினால் தீயை அணைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

Default