Back to homepage

Tag "University"

வைத்திய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நாளை ஆரம்பம்

வைத்திய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நாளை ஆரம்பம் 0

🕔12:47, 14.ஜூன் 2020

அரச பல்கலைகழகங்களில் வைத்திய பீட மாணவர்களுக்கான இறுதியாண்டு பரீட்சை நாளை ஆரம்பமாகுமென பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி மாணவர்களை பரீட்சைக்கு அமர வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செயல்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படுமென ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். பரீட்சைக்கு வருகைதரும் மாணவர்கள்

Read Full Article
எதிர்வரும் 22 ஆம் திகதி பல்கலைக்கழக 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஆரம்பம்

எதிர்வரும் 22 ஆம் திகதி பல்கலைக்கழக 4 ஆம் வருட மாணவர்களின் பரீட்சைகள் ஆரம்பம் 0

🕔12:20, 13.ஜூன் 2020

அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 22ம் திகதி இறுதியாண்டு மாணவர்களின் பரீட்சைக்காக மீள திறக்கப்படவுள்ளதாக உயர்கல்வியமைச்சு அறிவித்துள்ளது. குறித்த பரீட்சைகள் அனைத்தும் ஓகஸ்ட் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நிறைவுசெய்யப்படவேண்டுமென உயர்கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று முற்பகல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் வளாகத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே பல்கலைக்கழகங்களின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பான

Read Full Article
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்து இன்று இறுதி தீர்மானம்

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்து இன்று இறுதி தீர்மானம் 0

🕔11:33, 13.ஜூன் 2020

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இன்றையதினம் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பங்களிப்புடன் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் உட்பட சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கமைய இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இதற்கமைய உத்தியோகபூர்வமாக

Read Full Article
பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை இறுதி தீர்மானம்..

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை இறுதி தீர்மானம்.. 0

🕔16:07, 12.ஜூன் 2020

பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் நாளை இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பங்களிப்புடன் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார். அதன்போது முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் அத்துடன் சுகாதார பிரிவினரின் ஆலோசனைகளுக்கமைய இறுதி தீர்மானம் எடுக்கப்படும். நாளைய

Read Full Article
கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப விஞ்ஞான பீடம் இன்று அங்குரார்ப்பணம்

கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப விஞ்ஞான பீடம் இன்று அங்குரார்ப்பணம் 0

🕔15:52, 11.ஜூன் 2020

கொழும்பு பல்கலைக்கழக தொழில்நுட்ப விஞ்ஞான பீடம் இன்று அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. ஹோமாகம பிட்டிபன மாஹேனவத்த பகுதியில் குறித்த தொழில்நுட்ப பீடம் அமைக்கப்பட்டுள்ளது. இது கொழும்பு பல்கலைக்கழகத்தின் 9வது பீடமாகும். சிரேஸ்ட பேராசிரியர் சுமேத ஜயநெத்தி, இப்பீடத்தின் முதலாவது பீடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read Full Article
பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக தொழில்கள் அவர்களை தேடி வரும் கல்வி முறைமை அவசியம்

பட்டதாரிகள் தொழில் கேட்டு ஊர்வலம் செல்வதற்கு பதிலாக தொழில்கள் அவர்களை தேடி வரும் கல்வி முறைமை அவசியம் 0

🕔11:51, 16.மே 2020

பல்கலைக்கழக கல்வியை நிறைவுசெய்து சமூகத்திற்குள் பிரவேசிக்கும் பட்டதாரிகளுக்கு இலகுவாக தொழில்களை தேடிக்கொள்வதற்கு உதவும் வகையில் உயர் கல்வி முறைமையை தயாரிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். பல்கலைக்கழக கல்வி பற்றி எத்தகைய வியாக்கியானங்கள் இருந்த போதும் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் இளைஞர் யுவதிகளுக்கு தொழிலொன்றை தேடிக்கொள்ள முடியாதாயின் அது சரியான கல்வி

Read Full Article
பல்கலை. அனுமதி விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல்

பல்கலை. அனுமதி விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்தல் 0

🕔11:23, 18.மார்ச் 2020

பல்கலைக்கழக அனுமதி விண்ணப்பங்களை உறுதிப்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. எதிர்வரும் 27 ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 19 ம் திகதி வரை இதற்கான வசதிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது. முதற்கட்ட பணியாகும். இதற்கான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சு பாடசாலை

Read Full Article
பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை

பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை 0

🕔15:13, 13.மார்ச் 2020

நாளை தொடக்கம் 2 வார காலத்திற்கு நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். இதேவேளை மேல் மாகாணத்தில் உள்ள சகல முன்பள்ளி பாடசாலைகளையும் தற்காலிகமாக மூடிவிட அம்மாகாண கல்வி திணைக்களம்

Read Full Article
ஜபுர மாணவனின் கனவை சின்னாப்பின்னமாக்கிய 15 சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை

ஜபுர மாணவனின் கனவை சின்னாப்பின்னமாக்கிய 15 சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்பு தடை 0

🕔12:24, 13.மார்ச் 2020

மாணவர் ஒருவர் மீது டயர் ஒன்றை தள்ளிவிட்டு ஏற்படுத்திய அனர்த்தம் குறித்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து தற்போது விளக்கமறியலில் உள்ள ஆறு மாணவர்களினதும் கல்வி செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதேவேளை பகிடிவதை மூலம் அரசியல் குறுகிய நோக்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களின் ஒருசில மாணவர்

Read Full Article
ஜயவர்தனபுர பல்கலை. மாணவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் நீதிமன்றில் ஆஜர்

ஜயவர்தனபுர பல்கலை. மாணவர் காயமடைந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் நீதிமன்றில் ஆஜர் 0

🕔11:36, 12.மார்ச் 2020

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவனை விபத்துக்குள்ளாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையதாக கைதுசெய்யப்பட்ட 5 மாணவர்களும் இன்றைய தினம் நுகோகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். குறித்த ஐவரும் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டனர். விபத்துக்குள்ளான மாணவன் தொடர்ந்தும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பு தெரிவித்துள்ளது.

Read Full Article

Default