ஓய்வூதியம் பெறுவோருக்கு இன்று முதல் இலவச புகையிரத பயணச்சீட்டு 0
ஓய்வூதியம் பெறுவோர் இன்று முதல் இலவச புகையிரத பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியுமென போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. ஓய்வூதிய அடையாள அட்டையை புகையிரத நிலையத்தில் காண்பித்து இலவச டிக்கற்றுக்களை பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். புகையிரத திணைக்களமும் ஓய்வூதிய திணைக்களமும் இணைந்து குறித்த சேவையை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.