கழிவுத்தேயிலையுடன் ஒருவர் கைது 0
கம்பளை வெலம்பட ரெகவல்பொல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கழிவுத்தேயிலையுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கழிவுத் தேயிலையுடன் அனுமதி பத்திரம் இல்லதாத பாரவூர்தியில் பயணித்துக்கொண்டிருந்த போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். குறித்த பாரவூர்தியில் இருந்து ஆயிரத்து 924 கிலோ கிராம் கழிவுத்தேயிலை விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டது. அவை லெம்பட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.