Back to homepage

Tag "Syria"

சிரியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 26 பேர் பலி

சிரியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 26 பேர் பலி 0

🕔12:34, 13.மார்ச் 2020

சிரியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 26 பேர் பலியாகியுள்ளனர். கூட்டு படைகள் தாக்குதலை நடத்தியுள்ளன. ஈராக் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவொன்றை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆயுததாரிகள் என அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர். ஹஷத் ஷாபி எனப்படும் ஆயுதக்குழு சிரியாவின் பல பகுதிகளில் பதுங்கியிருந்து தாக்குதல்களை

Read Full Article
சிரியாவில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழப்பு

சிரியாவில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழப்பு 0

🕔14:33, 8.மார்ச் 2020

சிரியாவில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் ஹொம்ஸ் மாகாணத்தில் எரிபொருள் கொள்கலன் வண்டியுடன் குறித்த பஸ் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. எரிபொருள் கொள்கலன் வண்டியின் பிரேக் கட்டமைப்பு செயலிழந்தமையால் குறித்த வண்டி மேலும் 15 வாகனங்களுடன் மோதியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பஸ்ஸில் பயணித்த அனைவரும் ஈராக் யாத்திரிகர்கள் என தெரியவந்துள்ளது.

Read Full Article
ரஷ்யா சிரியாவில் யுத்த குற்றங்களை இழைத்துள்ளதாக ஐ. நா. தெரிவிப்பு

ரஷ்யா சிரியாவில் யுத்த குற்றங்களை இழைத்துள்ளதாக ஐ. நா. தெரிவிப்பு 0

🕔11:17, 4.மார்ச் 2020

ரஷ்யா, சிரியாவில் யுத்த குற்றங்களை இழைத்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் இவ்வருட ஆரம்ப காலப்பகுதி வரை சிரியாவில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து குறித்த குழு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது. ரஷ்ய விமானங்கள் பொது மக்களின் நிலைகளை நேரடியாக தாக்கியமைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Article
சிரியாவில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் உக்கிரமம்

சிரியாவில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் உக்கிரமம் 0

🕔11:55, 26.பிப் 2020

சிரியாவில் இராணுவத்தினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் உக்கிரமடைந்துள்ளது. இதில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இட்லிப் மாகாணத்தின் தென்பகுயில் கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த நைராப் நகர் அரச படையினரால் கைப்பற்றப்பட்டது. குறித்த பகுதியை மீண்டும் தம்வசப்படுத்தும் நோக்கில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டும், கை எறிகுண்டுகளை வீசியும்

Read Full Article
சிரியாவில் கடும் நெருக்கடியான சூழல் : ஐ. நா

சிரியாவில் கடும் நெருக்கடியான சூழல் : ஐ. நா 0

🕔17:01, 20.பிப் 2020

சிரியாவில் கடும் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இட்லிப் உள்ளிட்ட பகுதிகளில் மோதல்களினால் சாதாரண பொதுமக்கள் பாரிய பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் சிரிய எல்லைப்பகுதியில் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் இடம்பெயர்ந்துள்ளோர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதில் சிக்கல்நிலை தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
சிரிய இராணுவத்தினர் மேற்கொண்ட வான் வழித்தாக்குதலில் 71 பேர் பலி

சிரிய இராணுவத்தினர் மேற்கொண்ட வான் வழித்தாக்குதலில் 71 பேர் பலி 0

🕔15:13, 14.பிப் 2020

சிரிய இராணுவத்தினர் மேற்கொண்ட வான்வழித்தாக்குதலில் 71 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் சாதாரண பொதுமக்கள் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 325க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிழக்கு கூட்டா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலியானவர்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் அடங்குவதாக கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

Read Full Article
தமது படை வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டால் சிரிய படை மீது தாக்குதல் நடத்த போவதாக துருக்கி எச்சரிப்பு

தமது படை வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டால் சிரிய படை மீது தாக்குதல் நடத்த போவதாக துருக்கி எச்சரிப்பு 0

🕔17:32, 12.பிப் 2020

துருக்கியின் ஒரு படை வீரருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டால் சிரிய படை மீது தாக்குதல் நடத்த போவதாக துருக்கி எச்சரித்துள்ளது. துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையுப் எர்டோகான் கருத்து தெரிவிக்கையில் துருக்கி படையினர் எங்கிருந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. தேவையேற்படின் விமான தாக்குதல்களையும் நடத்த போவதாக அவர் கூறியுள்ளார். சிரிய படையினர் மேற்கொண்ட தாக்குதல்களில்

Read Full Article
சிரியாவில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர் உக்கிரம்

சிரியாவில் அரச படையினருக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் போர் உக்கிரம் 0

🕔12:04, 17.ஜன 2020

சிரியாவில் அரச படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் உக்கிர போர் நடைபெற்றுள்ளது. இதனால் 39 பேர் பலியாகியுள்ளனர். அதில் 17 இராணுவத்தினரும் அடங்குவதாக சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இட்லிப் நகரில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் ஆயுததாரிகள் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் விமான தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 18 பேர் பலியானதாக மனித

Read Full Article
சிரிய விமானப்படை மத்திய நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல்

சிரிய விமானப்படை மத்திய நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் 0

🕔14:24, 15.ஜன 2020

சிரிய விமானப்படை மத்திய நிலையத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. எவ்வாறெனினும் தமது வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்பின் ஊடாக இஸ்ரேலில் ஏவுகணைகளை அடித்து நொறுக்கியதாக சிரிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பல கட்டடங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. தமது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு வான்வெளி பாதுகாப்பு கட்டமைப்புக்களை மேலம் வலுப்படுத்த உள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது.

Read Full Article
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சிரியாவுக்கு திடீர் விஜயம்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சிரியாவுக்கு திடீர் விஜயம் 0

🕔11:59, 8.ஜன 2020

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சிரியாவுக்கு திடீர் பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதட்டநிலை காணப்படும் இச்சந்தர்ப்பத்தில் புட்டின் சிரியாவுக்கு சென்றுள்ளார். சிரிய ஜனாதிபதி மற்றும் அதிகாரிகளை சந்தித்து ரஷ்யா ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அமெரிக்க – ஈரான் விவகாரம் குறித்தும் பேசப்பட்டிருக்கலாமென சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. சிரியா, எல்லையிலுள்ள ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவம்

Read Full Article

Default