அபிவிருத்தி புரிந்துணர்வு திட்டங்களை துரிதப்படுத்த இலங்கையும் சீனாவும் இணக்கம் 0
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி புரிந்துணர்வு திட்டங்களை துரிதப்படுத்த இலங்கையும் சீனாவும் இணங்கியுள்ளன. இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் ராஜதந்திர ஆலோசனை சபையின் 11 வது கூட்டத்தொடரின் போதே இவ்விணக்கப்பாடு எட்டப்பட்டது. வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே மற்றும் சீனாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் லூவோ ஜவோ ஹூய் ஆகியோர் இணையத்தளம் ஊடாக இக்கூட்டத்தொடரில் உரையாற்றினர்.