சஹ்ரான் குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு குற்ற விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளது : விசாரணைகளில் அம்பலம்
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தாக்குதல்களை மேற்கொண்ட சஹ்ரான் உள்ளிட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் முக்கியஸ்தர்கள் சிலர் தொடர்பாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை அரச புலனாய்வு பிரிவு குற்ற விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. தாக்குதல்களுக்கு முன்னர் குறித்த பெயர் விபரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களை