Back to homepage

Tag "Seeds"

அரச களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை

அரச களஞ்சியசாலைகளில் உள்ள நெல்லை அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை 0

🕔14:54, 23.அக் 2019

அரசுக்கு சொந்தமான களஞ்சியசாலைகளில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல்லை, சிறு மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலைகளிலிருந்து லங்கா சதொச வலையமைப்பின் ஊடாக நுகர்வோருக்கு அரிசியை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசியை 80 ரூபாவுக்கும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 85 ரூபாவுக்கும் விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
அதிகரித்த விலையில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

அதிகரித்த விலையில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம் 0

🕔12:58, 27.ஆக 2019

அதிகரித்த விலையில் நெற்கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகிறது. விவசாயிகளிடமிருந்து நெற்கொள்வனவு செய்யும் போது அதற்கான விலையை 5 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

Read Full Article
நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம்

நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரிக்க தீர்மானம் 0

🕔16:06, 13.ஆக 2019

விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அமைச்சரவை அனுமதிக்காக இன்று சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் பி.ஹெரிசன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இம்முறை பாரிய நீர்ப்பாசன குளங்கள் சார்ந்த நெற்செய்கைகளில் மாத்திரமே அறுவடை பெறப்பட்டது. சில பகுதிகளில் நெல் அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளது.

Read Full Article
நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்

நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம் 0

🕔10:49, 17.ஏப் 2019

நெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒருமாத காலத்திற்கு நெற் களஞ்சியசாலைகள் அனைத்தும் திறக்கப்படவுள்ளன. விவசாயிகளுக்கு எவ்வித அசௌகரியங்களுமின்றி நெற் தொகையை வழங்கமுடியுமென நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார்.

Read Full Article
சிறுபோக நெற்செய்கைக்கான செய்திட்டங்கள் தயார்

சிறுபோக நெற்செய்கைக்கான செய்திட்டங்கள் தயார் 0

🕔15:26, 31.மார்ச் 2019

சிறுபோக நெற்செய்கைக்கான செய்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் டப்ளியூ.டப்ளியூ.வீரகோன் தெரிவித்துள்ளார். நெற்செய்கைக்கு மேலதிகமாக, ஏனைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை பயிர்ச்செய்கைக்கு தேவையான உரம் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய உர செயலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
நெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம்

நெற்கொள்வனவின் போது முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென விசேட தொலைபேசி இலக்கம் 0

🕔10:15, 24.மார்ச் 2019

பெரும்போகத்தில் நெற்கொள்வனவு செய்யும்போது அதனுடன் தொடர்புடைய பொதுமக்களின் முறைப்பாடுகளை பதிவுசெய்வதற்கென நெற் சந்தைப்படுத்தல் சபை விசேட தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 011 233 5986 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி, முறைப்பாட்டை பதிவுசெய்ய முடியுமென நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை இம்முறை பெரும்போகத்தில் 30 இலட்சம் மெட்ரிக் தொன் நெல்

Read Full Article
போலி வர்த்தகர்களிடம் ஏமாறாது நெற்கொள்வனவு மத்திய நிலையங்களுக்கு நெல்லை வழங்குமாறு அறிவுறுத்தல்

போலி வர்த்தகர்களிடம் ஏமாறாது நெற்கொள்வனவு மத்திய நிலையங்களுக்கு நெல்லை வழங்குமாறு அறிவுறுத்தல் 0

🕔14:53, 8.மார்ச் 2019

போலி வர்த்தகர்களிடம் அகப்படாது நெற் கொள்வனவு மத்திய நிலையத்தில் மாத்திரம் நெல்லை வழங்குமாறு நெற் சந்தைப்படுத்தல் சபை விவசாயிகளுக்கு அறிவித்துள்ளது. நெற்கொள்வனவிற்கு தேவையான சகல வசதிகளையும் களஞ்சியசாலைகளுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சாதாரண விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெற்சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஷ்தூரி அனுராத நாயக்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரம் 27

Read Full Article
நெற் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுப்பு

நெற் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுப்பு 0

🕔11:11, 29.ஜன 2019

நெற் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்கும் வகையில் நெற் களஞ்சியசாலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடிப்படையில் வவுனியா மாரம்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நெற் களஞ்சியசாலை திறந்து வைக்கப்பட்டது. பெரும்போகத்தில் நெற்கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கமைய 18 மாவட்டங்களில் நெற்கொள்வனவு செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. ஒரு

Read Full Article
உலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம்

உலக சந்தையில் உர விலை அதிகரித்த போதிலும் நிலவிய விலையில் உர நிவாரணம் 0

🕔14:29, 12.அக் 2018

உலக சந்தையில் உரத்திற்கான விலை அதிகரித்த போதிலும் உர நிவாரணத்தை நிலவிய விலைக்கே வழங்குவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர, தேசிய உர செயலகத்திற்கு இதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் யூரியாவின் விலை 370 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. எனினும் நிலவிய விலைக்கே உரத்தை வழங்குமாறு

Read Full Article
சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம் 0

🕔12:06, 4.ஆக 2018

சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கென 4 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இம்முறை சிறுபோகத்தில் 4.5 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 10 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக நெல்

Read Full Article

Default