Back to homepage

Tag "Schools"

3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு

3ம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு 0

🕔12:55, 28.நவ் 2019

அரச மற்றும் அரச அங்கீகாரத்தில் இயங்கும் பாடசாலைகளின் இவ்வருடத்திற்கான 3 ம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடைகின்றன. அடுத்த வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் இரண்டாம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Read Full Article
2020ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை

2020ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை 0

🕔13:23, 26.நவ் 2019

2020ம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான அமைச்சரவை பத்திரம் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார். 45 இலட்சத்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளுக்கு பதிலாக வவுச்சர்கள் வழங்கப்படவுள்ளன.

Read Full Article
665 பாடசாலைகளுக்கு மடிக் கணனிகள் : கல்வி அமைச்சு

665 பாடசாலைகளுக்கு மடிக் கணனிகள் : கல்வி அமைச்சு 0

🕔16:39, 2.நவ் 2019

பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை பயனுள்ள வகையில் மேம்படுத்த மடிக் கணனிகளை பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதற்கான ஆவணத்தை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்திருந்தார். இதற்கமைய நாடு முழுவதிலும் 9 மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அனைத்து மாகாணங்களிலும் ஒரு கல்வி வலயம் வீதம் தெரிவு செய்யப்பட்டு தரம் 6 முதல்

Read Full Article
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி 0

🕔16:19, 31.அக் 2019

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெறும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியின் முதலாம் நாளன்று நான்கு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. 16 வயதிற்கு உட்பட்ட 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல கல்லூரியைச் சேர்ந்த சித்தும் ஜயசுந்தர

Read Full Article
ஹம்பாந்தோட்ட, மாத்தறை முலட்டியான கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளையும் மூடப்படும்

ஹம்பாந்தோட்ட, மாத்தறை முலட்டியான கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளையும் மூடப்படும் 0

🕔16:14, 30.அக் 2019

சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் மாத்தறை மாவட்டத்தில் முலட்டியான கல்வி வலயத்திலுள்ள சகல பாடசாலைகளும் நாளையும் மூடப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலநிலை சீரடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
ஊவா மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட் கிழமை விடுமுறை

ஊவா மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட் கிழமை விடுமுறை 0

🕔15:13, 24.அக் 2019

ஊவா மாகாணத்தின் சகல தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28 ம் திகதி திங்கட் கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். தீபாவளித் தினம் 27 ம் திகதி என்பதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுவதாகவும் அன்றைய தினத்திற்கான கற்றல் செயற்பாடுகள் அடுத்த மாதம் 2 ம் திகதி சனிக்கிழமை இடம்பெறுமெனவும்

Read Full Article
பாடசாலை மட்டத்தில் கிரிக்கட் விளையாட்டை பிரபல்யப்படுத்துவதற்கு பாரிய வேலைத்திட்டங்கள்

பாடசாலை மட்டத்தில் கிரிக்கட் விளையாட்டை பிரபல்யப்படுத்துவதற்கு பாரிய வேலைத்திட்டங்கள் 0

🕔14:51, 24.அக் 2019

பாடசாலை மட்டத்தில் கிரிக்கட் விளையாட்டை பிரபல்யப்படுத்துவதற்கு பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணத்துங்க தெரிவித்துள்ளார். மேலும் தேவையற்ற நபர்களை கிரிக்கட் விளையாட்டிலிருந்து நீக்குவதற்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். அதனை தான் வரவேற்பதாக அர்ஜூன ரணத்துங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Read Full Article
எதிர்வரும் திங்கள் கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகள் மூடப்படும்

எதிர்வரும் திங்கள் கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற கல்வி வலயத்திற்குட்பட்ட சில பாடசாலைகள் மூடப்படும் 0

🕔13:01, 4.அக் 2019

எதிர்வரும் திங்கள் கிழமை அதாவது 7ம் திகதி கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பிரிவுகளுக்குட்பட்ட சகல பாடசாலைகள் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுற கல்வி வலயத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளும் மூடப்படும். ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்புமனு ஏற்றுக்கொள்வதை முன்னிட்டே இத்தீர்மானம் எட்டப்பட்டது. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் தினத்தில் கொழும்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பொரளை, கொழும்பு தெற்கு மற்றும் மத்திய கொழும்பு

Read Full Article
பெரும்பாலான பாடசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம்

பெரும்பாலான பாடசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் 0

🕔13:34, 27.செப் 2019

நாடு பூராகவும் அரச பாடசாலைகளை சேர்ந்த ஆசிரியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தமானது இன்றை தினமும் அமுல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான பாடசாலை நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்றைய தினம் ஆசிரியர்கள் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர். எவ்வாறாயினும் ஒரு சில பாடசாலைகளின் செயற்பாடுகள் வழமைப்போல் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read Full Article
உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு டெப் வழங்கும் நடவடிக்கை

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு டெப் வழங்கும் நடவடிக்கை 0

🕔11:39, 25.செப் 2019

தேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்றும் சகல மாணவர்களுக்கும் டெப் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய பாடசாலைகளில் உயர்தரத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் டெப் வழங்கவுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு அமைவாக ஒரு இலட்சம்

Read Full Article

Default