Back to homepage

Tag "Pakistan"

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

பாகிஸ்தான் தற்கொலை குண்டுத்தாக்குதல் பலி எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔13:35, 14.ஜூலை 2018

பாகிஸ்தானின் மஸ்தங் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 200 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 25ம் திகதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரச்சார பணிகள் தீவிரமடைந்துள்ளன. பிரச்சார மேடைளை இலக்கு வைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. தாக்குதலுக்கு தலீபான்

Read Full Article
பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர் கைது

பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர் கைது 0

🕔11:47, 13.ஜூலை 2018

பண மோசடியில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவர், கல்கிஸ்ஸை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கற்கைக்கென கெனடாவுக்கு அனுப்புவதாக கூறி அவர் 15 இலட்சத்துக்கும் அதிக பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்கிஸ்ஸை விசேட குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் இன்றைய கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
பாகிஸ்தான் தேர்தல் பேரணி தற்கொலைகுண்டுத்தாக்குதல் : 20 பேர் பலி

பாகிஸ்தான் தேர்தல் பேரணி தற்கொலைகுண்டுத்தாக்குதல் : 20 பேர் பலி 0

🕔11:35, 12.ஜூலை 2018

பாகிஸ்தான் தேர்தல் பேரணியொன்றில் தற்கொலைகுண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 20 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 66 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தலீபான் அமைப்பினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தேர்தல் பேரணியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இம்மாத ஆரம்ப பகுதியில் இடம்பெற்ற தாக்குதலொன்றில் 7 பேர் பலியாகியிருந்தனர்.

Read Full Article
பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 13 பேர் பலி

பாகிஸ்தானில் தற்கொலை குண்டுத்தாக்குதலில் 13 பேர் பலி 0

🕔13:09, 11.ஜூலை 2018

பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் 13 பேர் பலியாகியுள்ளனர். எதிர்வரும் 25ம் திகதி பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பெஷாவர் நகரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் தேசிய அவாமி கட்சி வேட்பாளர் ஹாரூன் பிளார் உட்பட 12 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர்

Read Full Article
பாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தொன்றில் 6 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தொன்றில் 6 பேர் பலி 0

🕔16:38, 5.ஜூலை 2018

பாகிஸ்தானில் இடம்பெற்ற விபத்தொன்றில் 6 பேர் பலியாகியுள்ளனர். சம்பவம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. பஸ்வண்டியொன்றுடன் டிப்பர் ரக வாகனமொன்று மோதியலில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் 15 க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் மழை : 7 பேர் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடும் மழை : 7 பேர் பலி 0

🕔13:10, 4.ஜூலை 2018

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக 7 பேர் பலியாகியுள்ளனர். அங்கு 238 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த 38 ஆண்டுகளுக்கு பின்னர் கூடுதலான மழைவீழ்ச்சி பதிவான முதற்சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தின் தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்தும் 24 மணித்தியாலத்திற்கு பலத்த மழை பெய்யுமென பாகிஸ்தான் வானிலை ஆய்வு

Read Full Article
பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி – ஜனாதிபதி சந்திப்பு 0

🕔15:09, 29.ஜூன் 2018

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். பொலன்னறுவையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது. பாதுகாப்பு பணிக்குழாம் அதிகாரி அட்மிரல் ரவீந்ர விஜேகுணரத்னவின் அழைப்பின் பேரிலேயே ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாட் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இதன்

Read Full Article
காஷ்மீர் பகுதியில் ஐ. நா விசாரணைக்கு தயார் : பாகிஸ்தான்

காஷ்மீர் பகுதியில் ஐ. நா விசாரணைக்கு தயார் : பாகிஸ்தான் 0

🕔11:36, 22.ஜூன் 2018

காஷ்மீர் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை விசாரணைகளை மேற்கொள்வதற்கு இந்தியா அனுமதித்தால் நாங்களும் தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. காஷ்மிர் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை தலைமை ஆணையாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். காஷ்மீர் பகுதியில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டுமென அறிக்கையில்

Read Full Article

Default