Back to homepage

Tag "Katunayaka"

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு உயர்ந்தமட்டத்தில்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு உயர்ந்தமட்டத்தில் 0

🕔10:51, 26.ஏப் 2019

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு உயர்ந்தமட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய முகாமையாளர் ஏ.எஸ்.ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார். உள்நாட்டு வெளிநாட்டு பயணிகளதும் விமான நிலைய பணியாளர்களதும் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதேவேளை விமான நிலையத்திற்குள் பயணிகள் மாத்திரமே அனுமதிக்கப்படுவரென விமான நிலைய முகாமையாளர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பயணிகள் தம்முடன் ஏனையவர்களை அழைத்து வருவதை தவிர்க்குமாறு கட்டுநாயக்க

Read Full Article
சட்டவிரோத தங்க நகைகளை எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜை கைது

சட்டவிரோத தங்க நகைகளை எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜை கைது 0

🕔12:08, 11.செப் 2018

சட்டவிரோதமாக தங்க நகைகளை நாட்டுக்குள் எடுத்துவர முற்பட்ட இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த நபரிடமிருந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

Read Full Article
சட்டவிரோத நாணயத்தாள்களுடன் சிங்கப்பூர் பிரஜை கைது

சட்டவிரோத நாணயத்தாள்களுடன் சிங்கப்பூர் பிரஜை கைது 0

🕔11:46, 24.ஜூலை 2018

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயதாள்களை சிங்கபூருக்கு எடுத்துச்செல்ல முயற்சித்த அந்நாட்டு பொறியியலாளரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட அவர் 43 வயதுடைய சிங்கப்பூர் பிரஜையென அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கோடியே 53 இலட்சத்து 4 ஆயிரத்து 85 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read Full Article
ஒருதொகை தங்கத்துடன் இந்திய பிரஜையொருவர் கைது

ஒருதொகை தங்கத்துடன் இந்திய பிரஜையொருவர் கைது 0

🕔11:45, 13.ஜூலை 2018

ஒருதொகை தங்கத்துடன் இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் கோலாலம்பூரிலிருந்து வருகைத்தந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபரிடமிருந்து 290.25 கிராம் நிறையுடைய 9 தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 1.8 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது.

Read Full Article
ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது

ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களுடன் ஒருவர் கைது 0

🕔09:34, 10.ஜூலை 2018

ஒருதொகை வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் எடுத்துவர முயற்சித்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். எமிரேட்ஸ் விமானத்தினூடாக சிங்கப்பூர் நோக்கி பயணிக்கும் நோக்கில் அவர் வருகைதந்துள்ளார். சந்தேகநபரின் இரு பயணப்பைகளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 27 இலட்சத்து 65 ஆயிரத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயத்தொகை கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க டொலர், பிரித்தானிய பவுண்

Read Full Article
கட்டுநாயக்கவில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்பு

கட்டுநாயக்கவில் ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்பு 0

🕔13:42, 7.ஜூலை 2018

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட 64 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்களை சிங்கப்பூருக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட சந்தேக நபர்கள் இருவர் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சவூதி ரியால், பிரித்தானிய பவுன் மற்றும் யூரோ நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டன. கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த குறித்த இரு சந்தேக நபர்களும் கடும்

Read Full Article
ஒருதொகை மாணிக்கக்கற்களுடன் சீன பெண் கைது

ஒருதொகை மாணிக்கக்கற்களுடன் சீன பெண் கைது 0

🕔12:58, 4.ஜூலை 2018

ஒருதொகை மாணிக்கக்கற்களுடன் சீன பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேங்கொக் நகரிலிருந்து வருகைத்தந்த அவரிடமிருந்து மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த பெண்ணின் பயணப்பொதியிலிருந்து 18 பெரிய வகை மாணிக்கக்கற்களும், மேலும் ஒருதொகை சிறிய மாணிக்கக்கற்களும் கைப்பற்றப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். சீன பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களின் பெறுமதி 48 இலட்சம் ரூபாவென

Read Full Article
தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது

தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்கவில் ஒருவர் கைது 0

🕔12:30, 30.ஜூன் 2018

மூன்று தங்க பிஸ்கட்டுக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூரிலிருந்து அவர் குறித்த தங்க பிஸ்கட்டுக்களை எடுத்துவந்துள்ளார். அவற்றின் பெறுமதி 20 இலட்சம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜை கைது

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜை கைது 0

🕔12:25, 30.ஜூன் 2018

ஒருதொகை நீல மாணிக்கக்கற்களுடன் உகண்டா நாட்டு பிரஜையொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் உகண்டாவிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தின் மூலம் வருகைத்தந்துள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் பயணப்பையிலிருந்து குறித்த நீல மாணிக்ககற்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் பெறுமதி 80 இலட்சத்துக்கும் அதிகமென சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விமான

Read Full Article
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்கள் சுங்க வலையில்..

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்கள் சுங்க வலையில்.. 0

🕔10:27, 6.ஜூன் 2018

சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு நாணயத் தாள்களை கட்டுநாயக்க விமான நிலையச் சுங்க அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். நான்கு கோடிக்கும் அதிகமான இந்த நாணய தாள்களை எடுத்து வந்தவர் 28 வயதுடைய நீர்கொழும்பை சேர்ந்த நபர் ஆவர். அவரது பயணப்பையை சோதனையிட்ட போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றில் அமெரிக்க டாலர்கள்,

Read Full Article

Default