Back to homepage

Tag "Jaffna"

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் 0

🕔15:25, 30.ஜூன் 2018

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் பெற்றோல் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மூன்று மோட்டார் சைக்கிள்களில் வருகைத்தந்த குழுவினர் தாக்குதலை நடத்தியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். எனினும் தாக்குதலில் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டின் உறுப்பினரொருவர் ஆவா குழுவின் செயற்பாடுகளுடன் தொடர்புடைய காரணத்தினால் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார்

Read Full Article
வட்டுக்கோட்டை சிறுமி கொலை சம்பவம் மேலும் இருவர் கைது

வட்டுக்கோட்டை சிறுமி கொலை சம்பவம் மேலும் இருவர் கைது 0

🕔13:03, 30.ஜூன் 2018

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிறுமியொருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 6 வயதான குறித்த சிறுமி கடந்த 25ம் திகதி கொலைசெய்யப்பட்டார். சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட சந்தேக நர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
சிறுமி கொலை-கதறியழுத தாய்மார்கள்.

சிறுமி கொலை-கதறியழுத தாய்மார்கள். 0

🕔21:17, 28.ஜூன் 2018

யாழ் சுழிபுரம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து யாழ் நகரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. சுழிபுறம் காட்டுப்புலம் பகுதியில் வசித்து வந்த சி.ரெஜினா எனும் மாணவியின் சடலம் கடந்த 25 ஆம் திகதி அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்

Read Full Article
யாழ் மாணிப்பாய் பிரதேசத்தில் மோதல் : 6 பேர் காயம்

யாழ் மாணிப்பாய் பிரதேசத்தில் மோதல் : 6 பேர் காயம் 0

🕔12:51, 28.ஜூன் 2018

யாழ்ப்பாணம் மாணிப்பாய் பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் 6 பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வருகைத்தந்த 9 பேர் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுதலையானவரென மாணிப்பாய் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நீண்டகாலமாக குறித்த

Read Full Article
யாழில் சிறுமி சடலாமக மீட்கப்பட்ட விவகாரம்-சந்தேகநபருக்கு விளக்கமறியல்

யாழில் சிறுமி சடலாமக மீட்கப்பட்ட விவகாரம்-சந்தேகநபருக்கு விளக்கமறியல் 0

🕔15:44, 27.ஜூன் 2018

யாழ்-வட்டுக்கோட்டை-சுழிபுரத்தில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 22 வயதுடைய சந்தேக நபருக்கு எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியல் வஙழங்கப்பட்டுள்ளது.இவரிடம் தொடர்நதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.குறித்த சந்தேக நபருக்கு விரைவாக தண்டனை வழங்குமாறு கோரி யாழ் பகுதி பாடசாலை மாணவர்களும் அப்பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Full Article
யாழ் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது

யாழ் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது 0

🕔12:18, 18.ஜூன் 2018

யாழ் மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட தரப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்

Read Full Article
பாடசாலை விடுதியில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலை

பாடசாலை விடுதியில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலை 0

🕔11:21, 15.ஜூன் 2018

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாடசாலை விடுதியொன்றில் சிறுவனொருவன் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கழிவறையின் கூரையில் தூக்கிட்டு தற்கொலைசெய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுவன் 14 வயதான கோண்டாவில் பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. மரண விசாரணைகளின் பின்னர் சடலம் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் இடம்பெறவுள்ள நிலையில், ஊர்காவற்துறை பொலிஸார்

Read Full Article
கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை தடைசெய்யகோரி ஆர்ப்பாட்டம்.

கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை தடைசெய்யகோரி ஆர்ப்பாட்டம். 0

🕔20:20, 11.ஜூன் 2018

யாழ் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபடுபவர்களை தடைசெய்யகோரி இன்று பேரணியொன்று இடம்பெற்றது. யாழ் மாவட்டத்தின் வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டை பிடிப்பவர்களை தடுத்து நிறுத்த கோரி யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சம்மேளனத்திற்கு எதிரில் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது. மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச சம்மேளனத்தின் தலைவர்

Read Full Article
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீண்டகாலமாக இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீண்டகாலமாக இடம்பெற்ற போதைப்பொருள் கடத்தல் 0

🕔11:37, 6.ஜூன் 2018

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் நீண்டகாலமாக ஈடுபட்டுவந்த நபர் ஒருவரை கலேவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர் 26 வயதுடைய இளைஞரென பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் கையடக்கத்தொலைபேசியை பஸ்வண்டியினுள் வைத்துவிட்டு நடத்துனரிடம் முரண்பட்டபோதே கலேவல பொலிசார் சந்தேக நபரை கைதுசெய்துள்ளனர். இதன்போது அவரிடம் 25.25 கிராம்

Read Full Article

Default