Back to homepage

Tag "Jaffna"

யாழில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளை

யாழில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளை 0

🕔09:56, 21.ஆக 2019

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் அமெரிக்க பிரஜையொருவரிடமிருந்து 300 அமெரிக்க டொலர்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாப்பயணமாக வந்திருந்த அமெரிக்க பிரஜையை பின்தொடர்ந்து இரு இளைஞர்கள் அவரிடமிருந்து பணத்தினை கொள்ளையடித்து தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கமைய மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Read Full Article
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி புறக்கணிப்பில்..

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வி புறக்கணிப்பில்.. 0

🕔12:43, 15.ஆக 2019

மாணவர்களின் நலன்சார்ந்த 3 கோரிக்கைகளை முன்வைத்து இன்றையதினம் மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மாணவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு கல்வியை நிறைவுசெய்த மாணவர்களுக்கு இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதற்கு வேந்தர் நியமனம் மேற்கொள்ளப்படாமையே காரணமென கூறப்பட்டது. இதனால் உடனடியாக வேந்தர் நியமனத்தை மேற்கொள்ளுமாறும்

Read Full Article
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 0

🕔13:06, 3.ஆக 2019

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இதனால் நல்லூர் பகுதியில் விசேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. எதிர்வரும் திங்கட் கிழமையிலிருந்து விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படுமென யாழ் மாநகர முதல்வர் இமானுவேர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

Read Full Article
‘யாழ் புத்தகத் திருவிழா 2019’

‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ 0

🕔15:59, 30.ஜூலை 2019

வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘யாழ் புத்தகத் திருவிழா 2019’ எதிர்வரும் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் செப்டம்பர் 1ஆம் திகதி வரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மிகப்பிரமாண்டமாக இடம்பெறவுள்ள இந்த புத்தகக் கண்காட்சியில் பாடசாலை

Read Full Article
நல்லூர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று

நல்லூர் ஆலய வருடாந்த திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று 0

🕔15:03, 27.ஜூலை 2019

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவை முன்னிட்டு, காளாஞ்சி கையளிக்கும் வழிப்பாட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாவதை முன்னிட்டு வள்ளியம்மை திருக்கல்யாண வழிப்பாட்டினல் திருவிழாவிற்கான பந்தற்கால் நாட்டப்பட்டது. பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலையுடன் திருவிழாவுக்கான அழைப்புப் பத்திரிகை நல்லூரிலிருந்து

Read Full Article
5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம்

5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் 0

🕔14:55, 18.ஜூலை 2019

யாழ்ப்பாண மாநகர சபை எல்லையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படும் 5G அலைவரிசை திட்டத்திற்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபை முதல்வரின் அலுவலகத்திற்கு எதிராக ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஸ்மார்ட் லேம்ப் போல்ட் எனும் பெயரில் 5G தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்கு எதிர்ப்பு வெளியிடுவதாக தெரிவித்தனர். யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்டுடன் இதுகுறித்து சந்திப்பொன்றை

Read Full Article
வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு

வலி வடக்கில் பாதுகாப்பு படைகள் வசமிருந்த மேலுமொரு தொகுதி பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு 0

🕔18:33, 12.ஜூலை 2019

யாழ் வலிகாகம் வடக்கு பிரதேசத்தில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் பொதுமக்களுக்கு மீண்டும் கையளிக்கும் நிகழ்வு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் தலைமையில் இன்று (12) முற்பகல் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. யுத்தகாலத்தில் பாதுகாப்பு படையினரால் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்க வேண்டுமென்ற ஜனாதிபதி

Read Full Article
யாழ் பல்கலை. மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பம்

யாழ் பல்கலை. மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பம் 0

🕔10:54, 18.மே 2019

யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் கற்றல் நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் 22 ம் திகதி ஆரம்பிக்கப்டுமென பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய கலைப்பீடம், விஞ்ஞானபீடம், முகாமைத்துவ மற்றும் வணிக பீடம், விவசாய பீடம், பொறியியல் பீடம், தொழிநுட்ப பீடம், சித்த மருத்துவ அலகு என்பவற்றின் கற்றல் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்

Read Full Article
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் உள்ளிட்ட மூவர் பிணையில் விடுதலை 0

🕔12:41, 16.மே 2019

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச்சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எல்.ரி.ரி.ஈ அமைப்பின் தலைவரின் புகைப்படங்கள் பாததைகள் ஆகியவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில்

Read Full Article
யாழில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயம்

யாழில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயம் 0

🕔12:36, 20.ஏப் 2019

யாழ்ப்பாணத்தில் கம்பர்மலை முத்துமாரியம்மன் கோவிலில் கரகம் எடுப்பதில் இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஊரணி மற்றும் மந்திகை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article

Default