ஜப்பான், ருமேனியா, இஸ்ரேலில் தொழில்வாய்ப்பு
ஜப்பான், ருமேனியா, இஸ்ரேலில் எதிர்காலத்தில் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் 7 ஆயிரத்து 200 பேர் இஸ்ரேல் மற்றும் தென்கொரியாவுக்கு தொழில்வாய்ப்புக்கென அனுப்பிவைக்கப்படவுள்ளனர். ஜப்பான் மொழி பயிற்சியை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பாடநெறியொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ப்ரியங்கர ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.