சுகாதார சேவையில் வெட் வரியை நீக்க ஆலோசனை 0
சுகாதார சேவையில் வெட் வரியை நீக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய பொருளாதார சபையில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. ஆலோசனை கட்டணம், பரிசோதனை கட்டணம், வைத்தியசாலை கட்டணம் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள வெட் வரியை நீக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்களை, மறுசீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.