Back to homepage

Tag "Gun"

யால வனப்பகுதியில் துப்பாக்கி சமர்

யால வனப்பகுதியில் துப்பாக்கி சமர் 0

🕔15:16, 26.ஜூலை 2019

பாதுகாக்கப்பட்ட யால வனப்பகுதியில் துப்பாக்கி சமர் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கும் வன அதிகாரிகளுக்குமிடையில் பரஸ்பர துப்பாக்கிப்பிரயோகம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபரொருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கதிர்காமம் பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபர்கள் மூவர் தப்பிச்சென்றுள்ளனர். மாணிக்கக்கல் அகழ்வுக்கென பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் சில கைப்பற்றப்பட்டுள்ளன. தப்பிச்சென்ற சந்தேகநபர்களை

Read Full Article
கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு 0

🕔14:47, 18.ஜூலை 2019

பெல்மடுல்லை பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். துவக்கிற்கு வெடிமருந்து நிரப்பியபோது சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்வத்தில் உயிரிழந்தவர் 29 வயதுடையவரென என பொலிசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பெல்மடுல்லை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை

Read Full Article
மட்டக்களப்பு சம்பவம் குறித்து நால்வர் கைது : மேலதிக விசாரணைகள் ஆரம்பம்

மட்டக்களப்பு சம்பவம் குறித்து நால்வர் கைது : மேலதிக விசாரணைகள் ஆரம்பம் 0

🕔12:51, 5.ஜூலை 2019

மட்டக்களப்பு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிசார் மீது தாக்குதல் நடாத்தி ரிவோல்வரையும் ரவைகளையும் எடுத்துச்செல்வதற்கும் கடமைக்கு தடை ஏற்படுத்தி சம்பவம் குறித்து 4 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். நேற்றிரவு மட்டக்களப்பு பொலிசாரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. ஏனைய சந்தேக நபர்களும் கடத்திச்செல்லப்பட்ட துப்பாக்கியையும் தேடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Read Full Article
துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது 0

🕔12:28, 19.ஜூன் 2019

துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளியவத்தை பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டன. சந்தேகநபரை இன்று வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

Read Full Article
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது 0

🕔14:58, 28.மே 2019

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீகஹதென்ன பொலிஸ் நிலைய அதிகாரிகள் பெலவத்தை நகரில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகினர். சந்தேகத்திற்கிடமான இருவரும் முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தர்ப்பத்தில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. அவர்களை மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் இருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் இருவர் கைது 0

🕔12:41, 11.மே 2019

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மல்லாவி பொலிசாருக்கு கிடைத்த ரசகரிய தகவலொன்றையடுத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

Read Full Article
அனுமதிபத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த 3 சந்தேக நபர்கள் கைது

அனுமதிபத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த 3 சந்தேக நபர்கள் கைது 0

🕔16:42, 23.பிப் 2019

மாவனல்லை – இலுக்கொட பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி துப்பாக்கி வைத்திருந்த 3 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தனாகமவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். 18 மற்றும் 23 வயதுக்கிடைப்பட்டவர்களே கைதுசெய்யப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மாவனெல்லை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article
தன்னியக்க ஆயுதங்களின் உரிமையை உறுதி செய்யும் செயற்திட்டம் ஆரம்பம்

தன்னியக்க ஆயுதங்களின் உரிமையை உறுதி செய்யும் செயற்திட்டம் ஆரம்பம் 0

🕔12:40, 23.ஜன 2019

தன்னியக்க துப்பாக்கிகளுக்கான உரிமைகளை உறுதிசெய்யும் திட்டம் இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தற்போது விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதி பத்திரங்கள் இரத்து செய்யப்பட்டு இத்திட்டத்தின் மூலம் புதிய அனுமதிபத்திரங்கள் வழங்கப்படுமென இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

Read Full Article
சட்ட விரோத துப்பாக்கிகளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு நிதி அன்பளிப்பு

சட்ட விரோத துப்பாக்கிகளை கைப்பற்றும் அதிகாரிகளுக்கு நிதி அன்பளிப்பு 0

🕔13:46, 18.ஜன 2019

சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் உளவு பிரிவினருக்கும் விசேட நிதி அன்பளிப்பை வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. சட்டவிரோத துப்பாக்கிகளை கைப்பற்றுவதற்கு விசேட நடவடிக்கைகள் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 31ம் திகதி வரையான மூன்று மாத காலங்களுக்குள் இந்நடவடிக்கைகள் பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அமுல்படுத்தப்படவுள்ளன. இந்த விசேட

Read Full Article
சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் கைது

சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் கைது 0

🕔15:17, 22.நவ் 2018

திருகோணமலையில் சட்டவிரோத துப்பாக்கியுடன் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கியை மறைத்து வைத்திருந்து சட்டவிரோதமாக மிருகங்களை வேட்டையாடிவருவதாக சந்தேக நபர் மீது உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்தே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபரை இன்றைய தினம்

Read Full Article

Default