Back to homepage

Tag "Gun"

மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு

மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு 0

🕔11:37, 16.செப் 2020

மீட்டியாகொட களுப்பே பகுதியில் காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் விசேட அதிரடிப்படையினரால் கண்டெடுக்கப்பட்டன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி , போரா 12 ரக துப்பாக்கிகள், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 2 கைக்குண்டுகள் 9 மில்லிமீற்றர் 12 ரவைகள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டன.

Read Full Article
துப்பாக்கிகளுடன் 4 சந்தேக நபர்கள் கைது

துப்பாக்கிகளுடன் 4 சந்தேக நபர்கள் கைது 0

🕔12:21, 8.செப் 2020

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் 4 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்ப்ட்டனர்;. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடனும் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடனும் சந்தேக நபர் ஒருவர் கஹவத்த பகுதியில் கைதுசெய்யப்பட்டார். உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் மேலும் 3 சந்தேக நபர்கள் மினுவாங்கொட , நில்பானாக்கொட பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Read Full Article
பல பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பல துப்பாக்கிகள் மீட்பு

பல பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பல துப்பாக்கிகள் மீட்பு 0

🕔17:36, 15.ஆக 2020

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பல துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. கம்பஹா கோணஹேன முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கிரிந்திவிட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 12 துப்பாக்கிகள் 4 ரவைகள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 58 வயதுடைய சந்தேகநபர் கம்பஹா பகுதியை வசிப்பிடமாக கொண்டவர். உள்நாட்டில்

Read Full Article
துப்பாக்கிச் சூடு : பெண்ணொருவர் பலி

துப்பாக்கிச் சூடு : பெண்ணொருவர் பலி 0

🕔11:55, 2.ஆக 2020

பெலியத்த பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது 52 வயதான பெண் உயிரிழந்துள்ளார்.  துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read Full Article
T 56 ரக 12 துப்பாக்கிகளுடன் ஹோமாக பிடிபன பகுதியில் வைத்து ஒருவர் கைது

T 56 ரக 12 துப்பாக்கிகளுடன் ஹோமாக பிடிபன பகுதியில் வைத்து ஒருவர் கைது 0

🕔15:00, 29.ஜூன் 2020

டி 56 ரக 12 துப்பாக்கிகளுடன் ஹோமாக பிடிபன பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டார். விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இது பாதாள உலக கும்பல்கள் மறைத்து வைத்துள்ள ஆயுதங்கள் என தெரியவந்துள்ளது.

Read Full Article
துப்பாக்கியுடன் வன ஜீவராசிகள் அதிகாரியொருவர் கைது

துப்பாக்கியுடன் வன ஜீவராசிகள் அதிகாரியொருவர் கைது 0

🕔15:42, 16.பிப் 2020

துப்பாக்கியுடன் வன ஜீவராசிகள் அலுவலக அதிகாரியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர் ஹம்பாந்தோட்டை – புத்தளம் வனஜீவராசிகள் அலுவலகத்திற்கு இணைவாக சேவையாற்றிய அதிகாரியென தெரியவந்துள்ளது. அனுமதிபத்திரமின்றி துப்பாக்கி, ரவைகள் உள்ளிட்ட சில உபகரணங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வன பாதுகாப்பு திணைக்கள தலைமையக அதிகாரிகள் அவரை கைதுசெய்துள்ளனர். 30 வயதான குறித்த அதிகாரி ஹம்பாந்தோட்டை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Read Full Article
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபரொருவர் கைது

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபரொருவர் கைது 0

🕔14:59, 2.பிப் 2020

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் சந்தேக நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அயகம ராஹுல பிரதேசத்தில் வைத்து அவர் கைதாகியுள்ளார். துப்பாக்கியுடன் கைதான நபர் 38 வயதானவரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் உடுகம அயகம பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரை இன்றைய தினம் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார்

Read Full Article
அவுஸ்திரேலியாவில் விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அனுமதி

அவுஸ்திரேலியாவில் விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அனுமதி 0

🕔10:17, 29.அக் 2019

அவுஸ்திரேலியாவில் விதிமுறைகளை மீறும் வாகன சாரதிகளின் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்துவதற்கான அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. சனநெரிசல் மிக்க பகுதிகளில் வாகனத்தை வேகமாக செலுத்தி வன்முறை செயலில் ஈடுபட முயற்சிக்கும் சாரதிகளுக்கு, அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரை வேகமாக செலுத்தி மக்கள் மீது மோதச் செய்யும் சம்பவங்கள் அந்நாட்டில் அதிகளவில் பதவாகிவருகின்றன. இதனை தடுப்பதற்கே குறித்த நடவடிக்கை

Read Full Article
பாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்போன துப்பாக்கிகள் அக்குரஸ்ஸயில் மீட்பு.

பாணந்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்போன துப்பாக்கிகள் அக்குரஸ்ஸயில் மீட்பு. 0

🕔12:53, 10.செப் 2019

பாணந்துறை வடக்கு பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல்போன டி-56 ரக துப்பாக்கிகள் இரண்டும் அக்குரஸ்ஸ பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஜுலை மாதம் 6ம் திகதி துப்பாக்கிகள் காணாமல்போயிருந்தன. இதுதொடர்பான தொடர் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்த நிலையில் சம்பவம் தொடர்பில் இன்றையதினம் இரண்டு இராணுவ வீரர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்

Read Full Article
சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது

சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது 0

🕔15:07, 22.ஆக 2019

சூரியவௌ – சுதுகல, மவ்ஹார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அலுத்வெல வீதி ஹம்பகமுவ பகுதியை சேர்ந்த 35 முதல் 56 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மிருக வேட்டைக்காக குறித்த துப்பாக்கிகளை வைத்திருந்திருக்கக் கூடுமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வெல்லவாய நீதவான்

Read Full Article

Default