அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதல் விசேட கொடுப்பனவு 0
அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், 15 ஆயிரம் ரூபா விசேட கொடுப்பனவை வழங்கவுள்ளதாக அரச நிர்வாக, உள்விவகார , மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான சுற்றுநிரூபம் தனது கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் சிரிபால ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரிகளின் நீண்டகால கோரிக்கைக்கமைய குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.