Back to homepage

Tag "Fisheries"

பாரிய மீன்வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம்

பாரிய மீன்வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டம் 0

🕔13:33, 23.ஆக 2018

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை கொண்டு பாரிய மீன்வளர்ப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சூழலுக்கு ஏற்ற வகையில் அவை முன்னெடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் இதில் பங்கேற்கவுள்ளனர். இதற்கு பொருத்தமான இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்படுமென இராஜாங்க அமைச்சர் திலிப்

Read Full Article
மீனவர்களின் வாடிகள் மற்றும் படகுகளை தீயிட்டு கொழுத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது

மீனவர்களின் வாடிகள் மற்றும் படகுகளை தீயிட்டு கொழுத்திய சம்பவம் தொடர்பில் மூவர் கைது 0

🕔10:31, 15.ஆக 2018

முல்லைத்தீவு நாயாறு மீனவர்களின் வாடிகள் மற்றும் படகுகளை தீயிட்டு கொழுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 8 வாடிகள் மற்றும் 2 படகுகள் முற்றாக சேதமடைந்தன. இந்நிலையில் குறித்த வாடியில் அன்றிரவு தங்கியிருந்த மூவர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில்

Read Full Article
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 பேர் கைது 0

🕔11:11, 7.ஆக 2018

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் டிங்கி படகு என்பன மீட்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read Full Article
சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைது 0

🕔15:26, 25.ஜூலை 2018

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து சந்தேக நபர்களை கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து இரு டிங்கி படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை கடற்றொழில் திணைக்களத்திடம் கையளித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
இந்திய மீனவர்கள் கைது

இந்திய மீனவர்கள் கைது 0

🕔17:14, 24.ஜூலை 2018

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ் மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.2 இயந்திரங்களில் வந்த அவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Read Full Article
மீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம் : கடற்றொழில், நீரியல்வள இராஜாங்க அமைச்சர்

மீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம் : கடற்றொழில், நீரியல்வள இராஜாங்க அமைச்சர் 0

🕔12:05, 24.ஜூலை 2018

மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதே நோக்கமென கடற்றொழில், நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். மீன் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த இலக்கை அடைவதற்காக மீன் ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்

Read Full Article
மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறை

மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறை 0

🕔14:46, 17.ஜூலை 2018

மீன்பிடி வள்ளங்களுக்கு புதிய காப்புறுதி முறையொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்தார். கடல்தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று மீன்பிடி துறை அமைச்சில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். எரிபொருள் விலை அதிகரித்ததையடுத்து கடல் தொழிலாளர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. எரிபொருள் விலை சூத்திரத்தினை நடைமுறைப்படுத்தும் போது

Read Full Article
மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம்

மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் 0

🕔13:53, 11.ஜூலை 2018

காலி மீன் பிடி துறைமுகத்திலிருந்து தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் 7 பேர் கண்டு பிடிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர். நேற்றிரவு மாலைதீவு கடற்பகுதியில் வைத்து இம்மீனவர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். இவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. காலி மீன் பிடி துறைமு:கத்திலிருந்து

Read Full Article
காணாமல் போன மீனவர்கள் மாலைதீவை அண்டிய கடலில் மீட்கப்பட்டனர்.

காணாமல் போன மீனவர்கள் மாலைதீவை அண்டிய கடலில் மீட்கப்பட்டனர். 0

🕔20:48, 10.ஜூலை 2018

காலி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்று காணமல் போன 7 மீனவர்களும் மாலை தீவை அண்டிய கடலில் வைத்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டுக்கு அழைத்து வர துரித நடவடிக்கை எடுக்கப்படுமென இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார். காலி மீனவர் துறைமுகத்திலிருந்து சிந்தூர் 2 எனும் படகில் கடந்த 14 ம்

Read Full Article
ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று 7 மீனவர்களுடன் காணாமல்போயுள்ளது

ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று 7 மீனவர்களுடன் காணாமல்போயுள்ளது 0

🕔12:19, 7.ஜூலை 2018

7 மீனவர்களுடன் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்ற படகொன்று காணாமல்போயுள்ளது. கடந்த மாதம் 14ம் திகதி காலி மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர். எனினும் அவர்கள் இதுவரை கரைக்கு திரும்பவில்லையென மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹிக்கடுவை, தெல்வத்த மற்றும் தொட்டகமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read Full Article

Default