Back to homepage

Tag "Fisheries"

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைது 0

🕔15:11, 10.பிப் 2019

கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புல்மோட்டை கொக்குத்துடுவாய் பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின்போது அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களிடமிருந்து மீன்பிடி படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு, வைத்திய பரிசோதனைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழில் பணிப்பாளரிடம்

Read Full Article
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கைது 0

🕔11:13, 29.ஜன 2019

சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுக்குரிய ட்ரோலர் வள்ளமொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.  வட கடலில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் ஊர்காவற்துறை கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்திய மீனவர்களும் ட்ரோலர் வள்ளமும் கடற்படை முகாமிற்கு எடுத்துவரப்பட்டது. கடற்றொழிலாளர்கள் வைத்திய பரிசோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்கென யாழ்

Read Full Article
சுற்றுச்சூழல் பரிந்துரையின் கீழ் மீன்பிடித்துறை ஏற்றுமதியில் இலங்கைக்கு முதலிடம்

சுற்றுச்சூழல் பரிந்துரையின் கீழ் மீன்பிடித்துறை ஏற்றுமதியில் இலங்கைக்கு முதலிடம் 0

🕔15:52, 18.ஜன 2019

சுற்றுச்சூழல் பரிந்துரைகளின் கீழ் மீன்பிடித்துறை ஏற்றுமதியாளர்களில் இலங்கை முதலிடத்திலுள்ளது. மொன்டேரோ பே எக்வேரின் சீவுட் வொச் வேலைத்திட்டத்தினூடாக இது தொடர்பான தெரிவு இடம்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மீன் ஏற்றுமதியின் மூலம் 190 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டது. அது இலங்கையின் மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பிரதான காரணமாக

Read Full Article
இலங்கை மீனவர்களை பாதுகாக்க விரிவான வேலைத்திட்டம் : கடற்படை அறிவிப்பு

இலங்கை மீனவர்களை பாதுகாக்க விரிவான வேலைத்திட்டம் : கடற்படை அறிவிப்பு 0

🕔14:08, 15.ஜன 2019

மீனவர்களின் பாதுகாப்புக்கென விரிவுப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென கடற்படை தெரிவித்துள்ளது. சட்டவிரோத மீன்பிடி தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களினால் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடந்த காலங்களில் இவ்வாறான பல்வேறு சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக உள்நுழையும் இந்திய மீனவர்களால், இலங்கை மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கடற்படைக்கு சொந்தமாக

Read Full Article
இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இந்திய மீனவர்கள் நால்வர் கைது 0

🕔15:46, 8.ஜன 2019

இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நிலையில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மீனவர்களின் ட்ரோலர் படகு கடற்படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்கென இந்திய மீனவர்கள் யாழ் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

Read Full Article
எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது

எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைது 0

🕔11:03, 18.டிசம்பர் 2018

கடல் எல்லையை மீறி செயற்பட்ட இந்திய மீனவர்கள் 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் அவர்கள் பயணித்த படகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியாவின் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Read Full Article
பேத்தாய் சூறாவளி காரணமாக வடபகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை

பேத்தாய் சூறாவளி காரணமாக வடபகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு முற்றாக தடை 0

🕔14:19, 16.டிசம்பர் 2018

பேத்தாய் சூறாவளி காரணமாக வடபகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நைனா தீவிற்கான யாத்திரை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். மேலும் யாழ்ப்பாணத்திலிருந்து நெடுந்தீவு வரை நாளாந்தம் இடம்பெறும் படகு சேவையும் நேற்றுமுதல் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனிடையே பருத்தித்துறை பகுதியிலிருந்து கடலுக்கு சென்ற படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதனால் அதில்

Read Full Article
கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவும் : எச்சரிக்கை

கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவும் : எச்சரிக்கை 0

🕔10:17, 20.நவ் 2018

இன்றும் நாளையும் கடலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பகுதிகளில் அலையின் தாக்கம் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வங்காள விரிகுடா கடற்பகுதியின் தென்திசையின் மத்தியில் தாழமுக்க நிலை வலுவடையுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுளள்

Read Full Article
இந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியில் சிக்கிய மீனவர்கள்  மீட்பு

இந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியில் சிக்கிய மீனவர்கள் மீட்பு 0

🕔15:00, 12.அக் 2018

இந்திய கடற்பரப்பில் டட்லி சூறாவளியி ல் சிக்கிய 150 மீனவர்கள் அந்நாட்டு மீட்பு குழுவினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். பல நாட்களுக்கு முன்னர் மீன்பிடி நடவடிக்கைக்காக கடலுக்கு சென்ற மீனவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். இந்திய கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் தேசிய அனர்த்த பிரிவு இணைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்தது.

Read Full Article
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மூவர் கைது 0

🕔11:35, 2.அக் 2018

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடமேல் பிராந்தியத்திற்கான கடற்படை பிரிவினர் அம்பந்தீவு பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட 3 வலைகள் மற்றும் இரண்டு படகுகள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. குறித்த மீனவர்கள் மூவரையும் புத்தளம் உதவி கடற்தொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article

Default