Back to homepage

Tag "Fisheries"

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கைது 0

🕔12:32, 3.செப் 2019

தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. சந்தேகநபர் காங்கேசன்துறை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. அடுத்த கட்ட சட்டநடவடிக்கைகளுக்காக சந்தேக நபரை யாழ் கடற்தொழில் பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
குடாவெல்ல மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்களை காணவில்லை

குடாவெல்ல மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்களை காணவில்லை 0

🕔17:52, 29.ஆக 2019

குடாவெல்ல மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற ஐந்து மீனவர்களை காணவில்லையென படகு உரிமையாளர் தெரிவித்துள்ளார். கடந்த முதலாம் திகதி நிசதி எனும் ஆழ்கடல் மீனவ படகு கடலுக்குச் சென்றுள்ளது. மீனவர்கள் கடந்த பத்தாம் திகதி வரை தொடர்புடன் இருந்துள்ளனர். தமது மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு அவர்கள் திரும்பிக்கொண்டிருந்த வேளை பொத்துவில் கடலை தாண்டியுள்ளனர். கந்தல

Read Full Article
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது 0

🕔15:09, 23.ஆக 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை, கொக்கிளாய் பகுதியில் வைத்து அவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கிழக்கு கடற்படை அதிகாரிகள் இதுதொடர்பான சுற்றி வளைப்பை முன்னெடுத்தனர். இதன்போது மீன்பிடிக்கென பயன்படுத்தப்பட்ட சட்டவிரோத வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு

Read Full Article
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைது 0

🕔15:04, 22.ஆக 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். வடக்கு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகினர். குறித்த மீனவர்கள் நால்வரும் அவர்கள் பயணித்த படகு மற்றும் உபகரணங்கள் யாழ் கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Read Full Article
தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேர் கைது 0

🕔13:30, 20.ஆக 2019

தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 22 பேரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். திருகோணமலை சம்பூர் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைதாகினர். கைதானவர்களிடமிருந்து தடைசெய்யப்பட்ட இரு வலைகளும் நான்கு டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை திருகோணமலை கடற்றொழில் பணிப்பாளர் காரியாலயத்தில் ஒப்படைக்கவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் கைது

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் கைது 0

🕔11:42, 19.ஆக 2019

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் கடற்படையினரலால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையின் நோர்வே தீவுக்கு அருகில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைதாகியுள்ளனர். மீனவர்களால் பிடிக்கப்பட்ட 376 கிலோகிராம் மீன்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

Read Full Article
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது 0

🕔13:03, 16.ஆக 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்படை அதிகாரிகள் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது திருகோணமலை நோவே தீவுக்கு அருகில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர். டிங்கி படகுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரமொன்றும், தடைசெய்யப்பட்ட வலையொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது 0

🕔15:40, 13.ஆக 2019

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்படையினர் நெடுந்தீவு பகுதியில் வைத்து அவர்களை நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். கைதானவர்கள் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வழத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
மீன்பிடிக்க செல்லவேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தல்

மீன்பிடிக்க செல்லவேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தல் 0

🕔12:59, 9.ஆக 2019

வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த கடல் பகுதியில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவிற்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Full Article
மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்பு

மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்பு 0

🕔13:29, 8.ஆக 2019

மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலுள்ள குமரிக் குளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இணைந்து இரவு 8 மணி முதல் குமரிக்குளத்தில்

Read Full Article

Default