Back to homepage

Tag "Fisheries"

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் கைது

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் கைது 0

🕔11:42, 19.ஆக 2019

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் கடற்படையினரலால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையின் நோர்வே தீவுக்கு அருகில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர்கள் கைதாகியுள்ளனர். மீனவர்களால் பிடிக்கப்பட்ட 376 கிலோகிராம் மீன்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் மூதூர் மற்றும் கிண்ணியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

Read Full Article
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைது 0

🕔13:03, 16.ஆக 2019

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கிழக்கு கடற்படை அதிகாரிகள் முன்னெடுத்த ரோந்து நடவடிக்கையின் போது திருகோணமலை நோவே தீவுக்கு அருகில் வைத்து அவர்கள் கைதாகியுள்ளனர். டிங்கி படகுக்கு பயன்படுத்தப்படும் இயந்திரமொன்றும், தடைசெய்யப்பட்ட வலையொன்றும் இதன்போது கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது 0

🕔15:40, 13.ஆக 2019

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கடற்படையினர் நெடுந்தீவு பகுதியில் வைத்து அவர்களை நேற்று இரவு கைதுசெய்துள்ளனர். கைதானவர்கள் இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது. அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும் நீரியல்வழத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
மீன்பிடிக்க செல்லவேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தல்

மீன்பிடிக்க செல்லவேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தல் 0

🕔12:59, 9.ஆக 2019

வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறித்த கடல் பகுதியில் மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுகிறது. இதனால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவிற்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Full Article
மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்பு

மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்பு 0

🕔13:29, 8.ஆக 2019

மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலுள்ள குமரிக் குளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இணைந்து இரவு 8 மணி முதல் குமரிக்குளத்தில்

Read Full Article
இந்திய மீனவர்கள் நால்வர் கைது

இந்திய மீனவர்கள் நால்வர் கைது 0

🕔12:32, 1.ஆக 2019

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கோவிலம் கலங்கரை விளக்கத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து டோலார் படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read Full Article
சட்டவிரோதமாக நாட்டின் கடல் எல்லையை மீறிய இந்திய மீனவர்கள் தலைமன்னாரில் கைது

சட்டவிரோதமாக நாட்டின் கடல் எல்லையை மீறிய இந்திய மீனவர்கள் தலைமன்னாரில் கைது 0

🕔13:27, 29.ஜூலை 2019

இலங்கை கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்த மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் வெளிச்ச வீடு கடற்பகுதியில் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. வடக்கு கடற்படை பிரிவுக்கு சொந்மான ரோந்து படகுகள் நடத்திய சுற்றிவளைப்பில் இந்திய மீனவர்கள் கைதாகியதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார். இதேவேளை கைதுசெய்யப்பட்ட

Read Full Article
தொடர்ந்தும் சிறிய வள்ளங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவிப்பு

தொடர்ந்தும் சிறிய வள்ளங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவிப்பு 0

🕔12:06, 22.ஜூலை 2019

தற்பொழுது நிலவும் வறட்சி காரணமாக தொடர்ந்தும் சிறிய வள்ளங்களில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு கடல் தொழில் திணைக்களத்தின் அவதானிப்பு பிரிவின் உதவி பணிப்பாளர் பத்மபிரிய திஷேரா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை வளிமண்டல திணைக்களம் வழங்கிய தகவலுக்கமைய ஓளரவுக்கு சீரான நிலைமை காணப்படுகிறது. இதற்கமைவாக நாம் விதித்திருந்த தடையை நீக்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். பெரிய

Read Full Article
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேர் கைது

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேர் கைது 0

🕔12:46, 16.ஜூலை 2019

முல்லைத்தீவு, கொக்குத்துடுவாய் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றையதினம் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஒரு டிங்கி படகு, வெளிப்புற மோட்டார் மற்றும் 510 அடி நீளமுள்ள அங்கீகரிக்கப்படாத மீன்பிடி வலை என்பன இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இவை முல்லைத்தீவு மீன்வள உதவி இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர்

Read Full Article
காத்தான்குடியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவர் கைது

காத்தான்குடியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவர் கைது 0

🕔09:56, 15.ஜூலை 2019

காத்தான்குடியில் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயதானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட வலைகள் மற்றும் சந்தேகநபர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Read Full Article

Default