Back to homepage

Tag "Elephant"

இலங்கையில் யானைகளின் மரணிக்கும் வீதம் அதிகரிப்பு

இலங்கையில் யானைகளின் மரணிக்கும் வீதம் அதிகரிப்பு 0

🕔12:53, 13.ஜன 2020

இலங்கையில் யானைகளின் மரணிக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டில் மாத்திரம் 361 யானைகள் உயிரிழந்துள்ளன. 1948ம் ஆண்டுக்கு பின்னர் வருடமொன்றில் அதிகளவான யானைகளின் இறப்பு கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதிகளவான யானைகளின் உயிரிழப்புக்கு மனித செயற்பாடுகளே காரணமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையிலுள்ள வனப்பகுதிகளில் ஏழாயிரத்து 500க்கும் அதிகமான யானைகள்

Read Full Article
காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு 0

🕔14:45, 17.செப் 2019

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். மதவாச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தரணகொல்லேவ குளக்கட்டு பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் பலத்த காயமடைந்த நபர் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த நபர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read Full Article
நிலாவெளி புறாதீவு தேசிய பூங்கா மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளது

நிலாவெளி புறாதீவு தேசிய பூங்கா மூன்று நாட்களுக்கு மூடப்படவுள்ளது 0

🕔13:06, 6.செப் 2019

எதிர்வரும் 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை புறாதீவு மூடப்படுமென வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது. 8 வருடங்களின் பின்னர் யானைகள் கணக்கெடுப்பு இடம்பெறவுள்ளமையால் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Read Full Article
நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளின் கணக்கெடுப்பை மேற்கொள்ள நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளின் கணக்கெடுப்பை மேற்கொள்ள நடவடிக்கை 0

🕔15:11, 25.ஆக 2019

நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளின் கணக்கெடுப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு நாட்டின் அனைத்து தேசிய பூங்காக்களும் அடுத்த மாதம் 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை மூடப்படுமென வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 13ம் மற்றும் 14ம் திகதிகளில் கணக்கெடுப்பு இடம்பெறும். இதற்கென நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள சுமார் 250 வனப்பிரதேசங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக திணைக்களத்தின்

Read Full Article
வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை

வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலை 0

🕔11:59, 7.ஆக 2019

வவுனியாவில் காட்டு யானைகளின் அட்டகாசம் தாங்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்போது கடும் வறட்சியான காலநிலை நிலவுவதால் காட்டு யானைகள் குடியிருப்புக்குள் நுழைந்து விவசாய நிலங்களையும் பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவநதுள்ளது.

Read Full Article
ஆபிரிக்காவில் யானைகளின் சடலத்தை உட்கொண்ட கழுகுகள் மர்ம மரணம்

ஆபிரிக்காவில் யானைகளின் சடலத்தை உட்கொண்ட கழுகுகள் மர்ம மரணம் 0

🕔14:14, 21.ஜூன் 2019

ஆப்பிரிக்காவில் இறந்த யானைகளின் உடல்களை உண்ட 500க்கும் மேற்பட்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா பகுதியில் வேட்டையாடப்பட்ட 3 யானைகள் இறந்து கிடந்துள்ளன. இந்த யானைகளின் சடலங்களை 500க்கும் மேற்பட்ட கழுகுகள் உட்கொண்டுள்ளன. இதில் 537 கழுகுகள் உயிரிழந்துள்ளன. பொதுவாக கழுகுகள் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின் சடலங்களை உண்பது வழக்கம். ஆனால், இந்த

Read Full Article
கடந்த மூன்று தினங்களாக காட்டு யானைகளின் தாக்குதலினால் வெலிகந்த பிரதேசத்தில் 17 வீடுகள் சேதம்

கடந்த மூன்று தினங்களாக காட்டு யானைகளின் தாக்குதலினால் வெலிகந்த பிரதேசத்தில் 17 வீடுகள் சேதம் 0

🕔15:00, 29.மே 2019

வெலிகந்த, திம்புலாகல, சிங்ஹபுர, சந்துன்பிடிய மற்றும் மதுரங்கல ஆகிய கிராமங்களிலேயே இந்த காட்டு யானை தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இந்த கிராமங்களுக்கு யானைகள் கூட்டமாக வந்து, வீடுகளுக்குள் உள்ள உணவு பொருட்களை எடுப்பதற்காக வீடுகளை சேதப்படுத்துவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். சோமாவதி தேசிய வன பூங்காவில் இருந்து கிராமத்திற்குள் வரும் யானைகளினால், தங்களது வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தல்

Read Full Article
அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேர் விடுதலை

அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேர் விடுதலை 0

🕔11:55, 7.மார்ச் 2019

சட்டவிரோத யானைக் கடத்தல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட அலி ரொஷான் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வழக்கு கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இது குறித்து விசாரணை செய்ய கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லாத காரணத்தால் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு மீதான விசாரணை சம்பத் அபேகோன்,

Read Full Article
யானை தாக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் பலி

யானை தாக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் பலி 0

🕔15:35, 1.மார்ச் 2019

திருகோணமலை இறக்ககண்டி பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்று மாலை பதிவாகியுள்ளது. இறக்கண்டி நான்காம் வட்டாரத்தைச் சேர்ந்த 29 வயதான அப்துல் ஹசன் றிஸ்வான் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கொம்பான் குளம் பகுதியிலுள்ள கச்சான் தோட்டத்திற்கு சென்று திரும்பும் போதே யானை தாக்கியுள்ளது. இதேவேளை உயிரிழந்தவரின் சடலம் நிலாவெளி பிரதேச

Read Full Article
கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் 445 காட்டு யானைகள் உயிரிழப்பு

கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் 445 காட்டு யானைகள் உயிரிழப்பு 0

🕔14:44, 16.ஜன 2019

கடந்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் 445 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் 311 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த காலப்பகுதிக்குள் காட்டு யானைகளின் தாக்குதலில் 95 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article

Default