Back to homepage

Tag "Drug"

கடல்மார்க்க சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

கடல்மார்க்க சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம் 0

🕔10:02, 17.ஜூலை 2018

கடல்மார்க்கமாக இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கென விசேட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை நிறுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அதற்கமைய துறைமுகங்களில் விசேட குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கரையோர பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடலிலிருந்து தரையிறங்கும் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான படகுகள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன. கடற்படை, மீன்பிடி மற்றும் நீர் வடிகாலமைப்பு திணைக்களம்

Read Full Article
போதை பொருள் விநியோக வலையமைப்பு நிர்மூலமாக்கப்படும் : பிரதமர் சூளுரைப்பு

போதை பொருள் விநியோக வலையமைப்பு நிர்மூலமாக்கப்படும் : பிரதமர் சூளுரைப்பு 0

🕔18:31, 14.ஜூலை 2018

போதைப்பொருள் விநியோக வலயத்தில் கைவைக்காமல் நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதை நிறுத்த முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளை முடக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கென சட்டதிட்டங்களை முறையாக செயற்படுத்தாமை, போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்கள் இன்மை மற்றும்

Read Full Article
போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் பாராட்டு

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் பாராட்டு 0

🕔12:09, 14.ஜூலை 2018

போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன எடுக்கும் நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் பாராட்டியுள்ளது. பிலிப்பைன்ஸில் எடுக்கும் சட்ட நடவடிக்கைகளில் இலங்கையும் இணைந்துள்ளமை மகிழச்சிக்குரியதென அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே தெரிவித்துள்ளார். பிலிப்பைன்ஸில் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்கு கடுமையான சட்ட நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கையும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கென ஆரம்பித்துள்ள வேலைத்திட்டங்கள் பாராட்டத்தக்கதென பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி

Read Full Article
வெளிநாட்டு மதுபானம் ஒருகொடவத்தை சுங்கத்திணைக்கள கொள்கலனில்

வெளிநாட்டு மதுபானம் ஒருகொடவத்தை சுங்கத்திணைக்கள கொள்கலனில் 0

🕔13:22, 5.ஜூலை 2018

ஒருகொடவத்தையிலுள்ள சுங்கத்திணைக்களத்தின் கொள்கலன் களஞ்சியசாலையிலிருந்து போதைப்பொருள் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சில மீட்கப்பட்டுள்ளன. அதன் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கு அதிகமென சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது இரு சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இத்தாலியிலிருந்து குறித்த மதுபான போத்தல்கள்  கொண்டுவரப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read Full Article
கஞ்சா கலந்த பாபுளுடன் ஒருவர் கைது

கஞ்சா கலந்த பாபுளுடன் ஒருவர் கைது 0

🕔13:21, 29.ஜூன் 2018

கஞ்சா போதைப்பொருள் கலந்த ஒரு கிலோ பாபுல் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை வைத்திருந்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேலியகொட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே கஞ்சா கலந்த பாபுல் கைப்பற்றப்பட்டுள்ளது. பேலியகொட, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் தேடுதலை மேற்கொண்டனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
போதைப்பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் அனுமதிக்க திட்டம்

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் அனுமதிக்க திட்டம் 0

🕔19:19, 28.ஜூன் 2018

போதைப்பொருள் வர்த்தகர்களிடம் சிக்கியுள்ள சிறுவர்களை பாடசாலையில் அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொழும்பு நகரை மையப்படுத்தி திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. போதைப் பொருள் தடுப்பு வாரம் பிரகடனப்படுத்தபக்பட்ட உடன் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த குமார தெரவித்துள்ளார். இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சுமார் 100 சிறுவர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக

Read Full Article
போதைப்பொருள் ஒழிப்பு வாரம்

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் 0

🕔05:20, 26.ஜூன் 2018

போதைப்பொருள் ஒழிப்பு வாரம் இன்று ஆரம்பமாகிறது.  சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத்தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றதற்கு அமைவாக இன்று போதைப்பொருள் ஒழிப்பு வாரம்  பிரகடனம்  செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 1970ஆம் ஆண்டு இந்த தினத்தை பிரகடனப்படுத்தியது. போதைப்பொருள் பாவனையற்ற சர்வதேச சமூகத்தை கட்டியெழுப்ப தேவையான இலக்கை அடைந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும் ஒத்துழைப்புக்களையும் வலுப்படுத்துவது இதன் நோக்கமாகும். சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்புத் தினத்திற்கு

Read Full Article
பாடசாலையை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் நிவாரண குழு

பாடசாலையை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் நிவாரண குழு 0

🕔12:45, 22.ஜூன் 2018

பாடசாலையை அண்மித்த பகுதியில் போதைப்பொருள் நிவாரண குழுவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பில் குறித்த குழு அமைக்கப்படவுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது. பாடசாலைக்குள் போதைப்பொருள் பயன்படுத்தும் மாணவர்களை இனங்காணல், வெளியில் இருந்து பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் நபர்களை கண்டறிதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் இதனூடாக முன்னெடுக்கப்படவுள்ளன.

Read Full Article
போதைப்பொருள் கடத்தல் நபர்களின் குடும்பத்தினர் மீதும் சட்டநடவடிக்கை

போதைப்பொருள் கடத்தல் நபர்களின் குடும்பத்தினர் மீதும் சட்டநடவடிக்கை 0

🕔14:49, 19.ஜூன் 2018

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களின் குடும்பத்தினர் மீதும், சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேர்ட் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய எந்தவொரு நபரும் பாரபட்சமின்றி தண்டிக்கப்படுவாரென அவர் குறிப்பிட்டுள்ளார். பிலிப்பைன்சில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு அதிரடி நடவடிக்கை கடந்த 2016ம் ஆண்டு முதல் நடைமுறையிலுள்ளது. இதுவரை நான்காயிரத்துக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபர்கள் பொலிசாரின்

Read Full Article
வத்தளையில் இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

வத்தளையில் இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு 0

🕔18:43, 16.ஜூன் 2018

இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபா பெறுமதியான 200 கிலோ கேரள கஞ்சா வெலிசரையில் கைப்பற்றப்பட்டுள்ளது. மீன்கள் கொண்டுசெல்லும் போர்வையில் கஞ்சா எடுத்து செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சகரும் பொலிஸ் ஊடக பேச்சாளருமான ருவன் குணசேக்கர தெரிவித்துள்ளார்.

Read Full Article

Default