Back to homepage

Tag "Donald Trump"

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயம் இரத்து

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயம் இரத்து 0

🕔15:58, 31.ஆக 2018

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரியாவுக்கான விஜயத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திடீரென விஜயம் இரத்து செய்துள்ளார். இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இவ்வாரம் வடகொரியா பயணிக்கவிருந்தார். சிங்கப்பூர் பேச்சுவார்த்தையின்போது வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியமை காரணமாகவே ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்க இராஜாங்க செயலாளரின் வடகொரிய விஜயத்தை ரத்து செய்துள்ளார்.

Read Full Article
ட்ரம்பின் மற்றுமொரு எச்சரிக்கை

ட்ரம்பின் மற்றுமொரு எச்சரிக்கை 0

🕔14:22, 29.ஆக 2018

கூகுள் , பேஸ்புக் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக ஊடக வலைத்தளங்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சமூக வலைத்தளங்கள் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்குவதாக அவர் தெரிவிக்கின்றார். இவற்றை ஒழுங்குப்படுத்துவதற்காக டிரம்ப்பின் நிர்வாகத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை கூகுல் நிறுவனம் எவ்வித அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கோ,

Read Full Article
ட்ரம்பின் ஆட்சிக்கு பெண்களில் அதிகமானோர் விருப்பமில்லாமல் உள்ளதாக தகவல்

ட்ரம்பின் ஆட்சிக்கு பெண்களில் அதிகமானோர் விருப்பமில்லாமல் உள்ளதாக தகவல் 0

🕔15:08, 14.ஆக 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்கு அந்நாட்டு பெண்களில் அதிகளவானோர் விருப்பமில்லாமல் உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. 18 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட பெண்களிடம் கருத்து கோரப்பட்டு இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 10 பெண்களில் 7 பேர் ட்ரம்பின் நிர்வாகத்திற்கு

Read Full Article
முட்டாள் என தேடினால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புகைப்படங்கள்

முட்டாள் என தேடினால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் புகைப்படங்கள் 0

🕔14:50, 21.ஜூலை 2018

கூகுள் இணையத்தளத்தில் முட்டாள் என தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புகைப்படங்கள் வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதி பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறார். அவரின் முடிவுகளுக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தற்பொழுது அவருக்கெதிரான இணையத்தள தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் கூகுள் தேடுபொறியில் முட்டாள் என தேடினால் ட்ரம்பின்

Read Full Article
ரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மைதரும் – ட்ரம்ப்

ரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது நன்மைதரும் – ட்ரம்ப் 0

🕔10:17, 17.ஜூலை 2018

ரஷ்யாவுடன் இணைந்து செயற்படுவது அமெரிக்காவுக்கு நன்மைதரும் விடயமென ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் ஹெல்சிங்கி நகரில் நேற்றையதினம் அமெரிக்க ஜனாதிபதிக்கும், ரஷ்ய ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது இரு தலைவர்களும் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறியுள்ளனர். உலகின் மிகப்பெரிய அணுவாயுத வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் இணைந்து பயணிக்க வேண்டுமென்பதையே சர்வதேசம்

Read Full Article
ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம்

ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் 0

🕔11:47, 13.ஜூலை 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விஜயத்தின்போது பிரித்தானிய பிரதமர் தெரேசா மே உள்ளிட்ட அரச உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read Full Article
ட்ரம்ப் மற்றும் ஏஞ்சலா மேர்க்கல் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை

ட்ரம்ப் மற்றும் ஏஞ்சலா மேர்க்கல் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தை 0

🕔11:47, 12.ஜூலை 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜேர்மன் ச்சான்சலர் ஏஞ்சலா மேர்க்கல் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. நேட்டே உச்சி மாநாட்டின்போதே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருநாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக தொடர்புகள் குறித்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Read Full Article
டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களின் பட்டியலில் ட்ரம்ப் முதலிடம்

டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களின் பட்டியலில் ட்ரம்ப் முதலிடம் 0

🕔13:16, 11.ஜூலை 2018

சமூக வலைத்தளமான டுவிட்டரில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் தலைவர்களின் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 5.2 கோடிக்கும் அதிகமானோர் டொனால்ட் ட்ரம்பை பின்தொடர்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து பாப்பரசர் பிரான்சிஸ் இரண்டாம் இடத்திலும் இந்திய பிரதமர் நரேந்திர

Read Full Article
ட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு

ட்ரம்ப் மற்றும் புட்டின் சந்திப்பு 0

🕔15:04, 7.ஜூலை 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். எதிர்வரும் 16ம் திகதி, பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் சந்திப்பு இடம்பெறுமென வெள்ளை மாளிகை கடந்த மாதம் அறிவித்தது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன், ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இதனை

Read Full Article
அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைது

அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைது 0

🕔13:46, 29.ஜூன் 2018

அமெரிக்க செனட் சபை முன்பாக போராட்டம் நடத்திய 575 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைதுசெய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பணிப்புரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தினர். எனினும் அவர்கள் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Full Article

Default