Back to homepage

Tag "Death"

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாய் கைது

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாய் கைது 0

🕔13:24, 20.ஆக 2019

பிறந்த குழந்தையை காசல்ரீ நீர்த்தேக்கத்தில் வீசிச்சென்ற இரு பிள்ளைகளின் தாயொருவர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை அவர் கைதானதாக தெரியவருகிறது. இப்பெண் ஹட்டன் டிக்கோயா வனராஜா பகுதியை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார். இவருக்கு மூன்று வயதுடைய பெண் பிள்ளையொன்றும் 8 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும் உள்ளதாக தெரியவந்துள்ளது. இப்பெண்ணின் கணவர்

Read Full Article
கொத்தலாவல வைத்தியசாலையின் மாடியிலிருந்து வீழ்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணை

கொத்தலாவல வைத்தியசாலையின் மாடியிலிருந்து வீழ்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில் விசாரணை 0

🕔11:07, 19.ஆக 2019

பொரலஸ்கமுவ வேரஹெர கொத்தலாவல வைத்தியசாலையின் 6வது மாடியிலிருந்து வீழ்ந்த பெண்ணின் மரணம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த வைத்தியசாலையின் உளநல சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணொருவரே இவ்வாறு மாடியிலிருந்து கீழே குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 28 வயதான குறித்த பெண் பன்னிப்பிட்டிய , மாலபல்ல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். நேற்றைய தினம் சம்பவம்

Read Full Article
வேனொன்று ரயிலில் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் இருவர் காயம்

வேனொன்று ரயிலில் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் இருவர் காயம் 0

🕔13:06, 16.ஆக 2019

வேனொன்று ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். அனுராதபுரம் தலாவ ரயில் நிலையத்தை அண்மித்து பாதுகாப்பற்ற ரயில் கடவை பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் பியகம சியம்பலாபே பகுதியை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வேனில் சாரதி உள்ளிட்ட மூவர் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி

தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி 0

🕔13:01, 16.ஆக 2019

தம்புள்ளை – ஹபரண பிரதான வீதியில் குடாகஸ்வௌ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லொறியொன்றும் வேனொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read Full Article
விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் 0

🕔12:39, 15.ஆக 2019

தம்புள்ளை – குருணாகல் வீதி பொல்கொல்ல விகாரைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். வேன் ஒன்று வீதியில் பயணித்த இருவரின் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த இருவரும் கொகரெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். பொல்கொல்ல பிரதேசத்தை 63 மற்றும் 87 வயதுடைய இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிசார்

Read Full Article
இராணுவ தலைமையகத்தில் பணியிலிருந்த இராணுவ வீரரொருவர் தற்கொலை

இராணுவ தலைமையகத்தில் பணியிலிருந்த இராணுவ வீரரொருவர் தற்கொலை 0

🕔16:37, 14.ஆக 2019

இராணுவ தலைமையகத்தில் பணியிலிருந்த இராணுவ வீரரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது பணிக்கென வழங்கப்பட்ட துப்பாக்கியை பயன்படுத்தி அவர் தன்னை சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பொலன்னறுவை பிரதேசத்தை சேர்ந்த இராணுவ தலைமையகத்தில் இணைந்து பணிபுரிந்தவராவார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article
மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்பு

மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்பு 0

🕔13:29, 8.ஆக 2019

மீன்பிடிக்கச் சென்ற நிலையில் நேற்று காணமல்போன ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாந்தை கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலுள்ள குமரிக் குளத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று மாலை 5 மணியளவில் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில் அயலவர்கள் இணைந்து இரவு 8 மணி முதல் குமரிக்குளத்தில்

Read Full Article
கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு 0

🕔12:49, 8.ஆக 2019

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கலல்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸொன்றும், கொழும்பு நோக்கி பயணித்த வேனொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது. வேனின் சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Read Full Article
வெற்றிலைக்கேணி பகுதியில் பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவன் கைது

வெற்றிலைக்கேணி பகுதியில் பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவன் கைது 0

🕔12:46, 7.ஆக 2019

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் தனது பாட்டியை கொலைசெய்த 16 வயது சிறுவனொருவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை விலக்குவதற்கு குறித்த வயோதிப பெண் முயற்சித்தபோது இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். நேற்றிரவு 16 மற்றும் 15 வயதுடைய இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின்போதே குறித்த கொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் தனது சகோதரனை தாக்க

Read Full Article
வெல்லவாய ஆனபல்லம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு

வெல்லவாய ஆனபல்லம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழப்பு 0

🕔11:09, 7.ஆக 2019

வெல்லவாய ஆனபல்லம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேனொன்றும் லொறியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read Full Article

Default