தெற்கு அதிவேக வீதி பஸ்ஸில் தீ பரவல்

தெற்கு அதிவேக வீதி பஸ்ஸில் தீ பரவல் 0

🕔10:05, 13.மார்ச் 2020

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியல் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாகும்புரவில் இருந்து காலி வரை பயணித்த பேருந்து ஒன்று இன்று காலை 7.00 மணிக்கு இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.

Read Full Article
ஹம்பாந்தோட்டையிலிருந்து  அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்புக்கு பஸ் சேவை…

ஹம்பாந்தோட்டையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்புக்கு பஸ் சேவை… 0

🕔12:54, 24.பிப் 2020

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான அதிவேக நெடுஞ்சாலையில் இன்று நள்ளிரவு முதல் போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 10 அதிசொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை, தங்காலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களிலிருந்து, கட்டுநாயக்க கடவத்தை மற்றும் கொழும்பு கோட்டை வரை குறித்த பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

Read Full Article
இரண்டு பஸ்கள், லொறி என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இருவர் பலி : 50 பேர் காயம்

இரண்டு பஸ்கள், லொறி என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து இருவர் பலி : 50 பேர் காயம் 0

🕔10:01, 21.பிப் 2020

தம்புள்ளை மாத்தளை பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இரண்டு தனியார் பேருந்துகள், லொறி என்பன ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 40 பேர் படுகாயமடைந்து நாவுல, தம்புள்ள மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (21) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சுமார் 50 பயணிகள் குறித்த பேருந்துகளில்

Read Full Article
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களின் நாளாந்த வருமானம் அதிகரிப்பு 0

🕔12:25, 12.பிப் 2020

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்களின் நாளாந்த வருமானம் அதிகரித்துள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. சபைக்கு சொந்தமான 107 டிப்போக்களில் 12 டிப்போக்களை தவிர ஏனைய 95 டிப்போக்களின் ஊடாக கடந்த மாதத்தில் மாத்திரம் வருமானம் அதிகரித்துள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. நாளொன்றுக்கு ஒன்றரை இலட்சம் ரூபா தலா ஒரு டிப்போவின் ஊடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

Read Full Article
அரைசொகுசு பஸ்வண்டிகளின் சேவை தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை இவ்வாரம் அமைச்சரிடம் கையளிப்பு

அரைசொகுசு பஸ்வண்டிகளின் சேவை தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை இவ்வாரம் அமைச்சரிடம் கையளிப்பு 0

🕔13:04, 4.பிப் 2020

அரைசொகுசு பஸ்வண்டிகளின் சேவை தொடர்பில் ஆராய்ந்து தயாரிக்கப்பட்ட அறிக்கை இவ்வாரம் அமைச்சர் மஹிந்த அமவீரவிடம் கைளிக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது 400 அரைசொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. எனினும் அதில் எவ்வித வசதிகளும் இல்லையென பயணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதுதொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உரிய தரப்பினருடன் கலந்துரையாடி பரிந்துரைகளை முன்வைக்குமாறு

Read Full Article
கவனயீனம் மற்றும் பராமரிப்பின்மையே மடுல்சீமை பஸ் விபத்துக்கு காரணம் : அறிக்கை கையளிப்பு

கவனயீனம் மற்றும் பராமரிப்பின்மையே மடுல்சீமை பஸ் விபத்துக்கு காரணம் : அறிக்கை கையளிப்பு 0

🕔17:12, 26.ஜன 2020

சரியான பராமரிப்பு இன்மை மற்றும் தொழிலை கவனயீனமாக செய்தததன் காரணமாகவே பசறை மடுல்சீமை பஸ் விபத்து இடம்பெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 6ம் திகதி மடுல்சீமை பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயங்களுக்குள்ளாகினர். இந்த விபத்து குறித்து விசாரணைகளை முன்னெடுத்து தனக்கு அறிக்கை

Read Full Article
போக்குவரத்து சபைக்குட்பட்ட டிப்போக்களின் மோசடிகள்  தொடர்பில் கண்டறிய விசேட குழு

போக்குவரத்து சபைக்குட்பட்ட டிப்போக்களின் மோசடிகள் தொடர்பில் கண்டறிய விசேட குழு 0

🕔12:04, 23.ஜன 2020

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் அதன் கீழ் உள்ள டிப்போக்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் கண்டறிவதற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் தலைவராக போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளர் திலகரத்ன பண்டா செயற்படுகினார். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் குறித்த குழுவினூடாக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளை மேற்கொண்டு

Read Full Article
பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல்கள்

பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல்கள் 0

🕔12:47, 21.ஜன 2020

பஸ் உட்பட கனரக வாகனங்களை செலுத்துவது தொடர்பில் புதிய ஒழுங்குப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பஸ் உட்பட அனைத்து கனரக வாகனங்களும் வீதியின் இடது பக்க ஒழுங்கையில் மாத்திரமே பயணிக்க வேண்டுமென நகர வாகன மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் குறித்த முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கொழும்பு வாகன போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

Read Full Article
பஸ்களில் எரிச்சலூட்டும் பாடல்களை ஒலிபரப்புவது குறித்து இன்று முதல் விசாரணைகள்

பஸ்களில் எரிச்சலூட்டும் பாடல்களை ஒலிபரப்புவது குறித்து இன்று முதல் விசாரணைகள் 0

🕔11:16, 16.ஜன 2020

பயணிகள் போக்குவரத்து பஸ்களில் எரிச்சலூட்டும் பாடல்களை ஒலிபரப்புவது குறித்து இன்று முதல் விசாரணைகள் ஆரம்பமாகுமென பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை பஸ்களுக்கு மெல்லிசை பாடல்களை வழங்கும் நடவடிக்கையை அமைச்சு முன்னெடுத்திருந்தது. இதனை பெற்றுக்கொள்ளும் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதற்கமைய இன்று முதல் இப்பாடல்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

Read Full Article
பஸ் வண்டிகளில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுவதை நிறுத்த காலஅவகாசம்

பஸ் வண்டிகளில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்படுவதை நிறுத்த காலஅவகாசம் 0

🕔15:16, 12.ஜன 2020

பஸ் வண்டிகளில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்துவதற்கு எதிர்வரும் 15ம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் அதிக சத்தத்ததுடன் பாடல்களை பஸ்களில் ஒலிபரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் வண்டிகளில் ஒலிபரப்புவதற்கென

Read Full Article

Default