இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு சீனா பயிற்சி
இலங்கை மெய்வல்லுனர் வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்கான பயிற்சிகளை வழங்குவதற்கு சீனா முன்வந்துள்ளது. இதுதொடர்பில் இருநாடுகளுக்கிடையிலான ஒலிம்பிக்குழுக்களிடையே உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நிகழ்வு 18ஆவது ஆசிய மெய்வல்லுனர் விழாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.