34வது கலாபூசணம் அரச விருது விழா ஜனாதிபதி தலைமையில்
நாட்டில் கலைத்துறையின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவைகளை வழங்கிய கலைஞர்களை பாராட்டி கௌரவிக்கும் 34வது கலாபூசணம் அரச விருது விழா இன்று இடம்பெறவுள்ளது. பிற்பகல் 4 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. அனைத்து மாகாணஙக்ளையும் சேர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலைஞர்கள் இதன்போது விருது வழங்கி