Back to homepage

Tag "Army"

இந்தியாவில் புதுடில்லியில் எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்தியாவில் புதுடில்லியில் எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பு 0

🕔13:41, 20.டிசம்பர் 2019

இந்தியாவில் புதுடில்லியில் எல்லைப் பாதுகாப்பு அதிகரிப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசாங்கத்தின் உத்தரவுக்கமைய டெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. டில்லியில் அதிகளவான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Read Full Article
போதைப்பொருள் தொடர்பில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் மூவர் கைது

போதைப்பொருள் தொடர்பில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் மூவர் கைது 0

🕔11:11, 5.டிசம்பர் 2019

போதைப்பொருள் தொடர்பில் கடற்படையினரும் பொலிசாரும் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். புத்தளம் பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது. கடல்மார்க்கமாக இடம்பெறும் வர்த்தகத்தை தடுக்க கடற்படையினர் தீவிர நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

Read Full Article
இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களது நலன்புரிகள் தொடர்பில் விசேட கவனம்

இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களது நலன்புரிகள் தொடர்பில் விசேட கவனம் 0

🕔13:18, 26.நவ் 2019

இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களது நலன்புரிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்த்ர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களது இடமாற்றம் மற்றும் ஓய்வு தொடர்பில் முன்னிலை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

Read Full Article
ஐ. நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவ வீரர்கள் இன்று மாலி பயணம்

ஐ. நா. அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவ வீரர்கள் இன்று மாலி பயணம் 0

🕔15:25, 13.நவ் 2019

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணிகளுக்காக இலங்கை இராணுவ வீரர்கள் 243 பேர் இன்று மாலி இராச்சியத்திற்கு பயணித்துள்ளனர். இவர்களில் 20 இராணுவ உயர் அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர். மேலும் வைத்தியர்கள், பொறியியலாளர்கள் மற்றும் சேவை படைப்பிரிவைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். இந்தோனேசியாவுக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக அவர்கள் இன்று மாலி நோக்கி பயணித்ததாக எமது கட்டுநாயக்க விமான

Read Full Article
ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு

ஜனாதிபதியின் தலைமையில் இலங்கை இராணுவ தலைமையகம் திறப்பு 0

🕔10:43, 8.நவ் 2019

பத்தரமுல்ல, பெலவத்த, அக்குரேகொட ,லங்கை ,ராணுவ நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று திறக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் ,ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளினுடைய தலைமையகங்கள் ஒரே நிலையத்தில் அமைப்பதற்காக 77 ஏக்கர் பரப்பில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைத் தலைமையகத்தையும் ஒரே இடத்தில் அமைக்கும்

Read Full Article
மாலி இராச்சியத்தின் அமைதிக்காக்கும் பணிகளுக்கென மற்றுமொரு இராணுவ குழுவினர் பயணம்

மாலி இராச்சியத்தின் அமைதிக்காக்கும் பணிகளுக்கென மற்றுமொரு இராணுவ குழுவினர் பயணம் 0

🕔14:04, 7.நவ் 2019

மாலி இராச்சியத்தின் அமைதிக்காக்கும் பணிகளுக்கென மற்றுமொரு இராணுவ குழுவினர் பயணிக்கவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். 243 பேர் அடங்கிய குழுவே மாலி இராச்சியத்திற்கு பயணிக்கவுள்ளது. அதில் 20 அதிகாரிகளும் அடங்குவதாக இராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவர்கள் நாட்டிலிருந்து வெளியேறவுள்ளனர். இதேவேளை தற்போது மாலி இராச்சியத்தில் அமைகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ குழுவொன்று எதிர்வரும் 14ம் திகதி

Read Full Article
படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு

படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று விடுவிப்பு 0

🕔15:16, 18.அக் 2019

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் வசமிருந்த 150.15 ஏக்கர் காணி இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. கிளிநொச்சி இரணைமடு இராணுவ தலைமையகத்தில் நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல்.எச்.எஸ்.சி சில்வா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் ஆகியோரிடம் காணி

Read Full Article
எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க வேண்டிய விதத்தில் இராணுவம் பலப்படுத்தப்படவுள்ளது

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க வேண்டிய விதத்தில் இராணுவம் பலப்படுத்தப்படவுள்ளது 0

🕔12:35, 11.அக் 2019

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க வேண்டிய விதத்தில் இராணுவத்தை பலப்படுத்தவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர ஷில்வா தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். 1949 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் 70 ஆண்டு

Read Full Article
இலங்கை இராணுவத்தின் 70 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு

இலங்கை இராணுவத்தின் 70 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு 0

🕔14:40, 10.அக் 2019

இலங்கை இராணுவத்தின் 70 வது ஆண்டு நிறைவு தின நிகழ்வு காலி முகத்திடலில் இடம்பெறுகிறது. இதற்கிணைவாக மேலும் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார். ஆயிரத்து 200 இராணுவத்தினரைக் கொண்ட அணிவகுப்பு மரியாதை இராணுவத்தளபதிக்கு இன்று முற்பகல் வழங்கப்பட்டது. 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நினைவு

Read Full Article
இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை

இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை 0

🕔15:31, 29.செப் 2019

இலங்கை அமைதிப்படையினர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவினாத் ஆரியசிங்க, ஐக்கிய நாடுகள் சமாதான செயற்பாடுகள் பணியகத்தின் உப செயலாளரை நாளை சந்திக்கவுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை இராணுவப்பிரிவையும், மேலும் சில அதிகாரிகளையும் இலங்கைக்கு திருப்பியனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய

Read Full Article

Default