“21ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க டெஸ்ட் கிரிக்கட் வீரர் முத்தைய்யா” : விஸ்டன் சஞ்சிகை 0
21 ம் நூற்றாண்டின் மிக மதிப்புமிக்க வீரராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தைய்யா முரளிதரண் பெயரிடப்பட்டுள்ளார். பிரபல்யாமான விஸ்டன் கிரிக்கட் சஞ்சிகையானது உலகின் முன்னணி கிரிக்கட் ஆய்வு நிறுவனமான கிரிக்விஸ்ஸுடன் இணைந்து 21 ம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முத்தையா முரளிதரண் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார்.