உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று… 0
உலக தடகள ஓட்டவீரர் ஹூசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக டுவிட்டர் செய்தி ஊடாக நேற்று அறிவித்துள்ளார். தனக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படவில்லை. எனினும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அவருடன் அண்மையில் பழகிய சகலரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அவர் அச்செய்தியின் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.