fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

சர்வதேச செய்திகள்

தாய்லாந்தில் காணாமல்போன மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது

தாய்லாந்தில் காணாமல்போன மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது 0

🕔17:31, 28.ஜூன் 2018

தாய்லாந்தில் காணாமல்போன பாடசாலை மாணவர்களை தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கென அமெரிக்க மற்றும் பிரித்தானிய மீட்பு பணியாளர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது. மலைப்பகுதியொன்றில் வெள்ள நீரில் சிக்குண்ட நிலையில் 12 பாடசாலை மாணவர்கள் உட்பட அவர்களின் கால்ப்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளரும் காணாமல்போயிருந்தனர். அவர்களை தேடும் பணிகள் 5வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதேவேளை காணாமல்போனவர்கள் உயிருடன்

Read Full Article
ட்ரம்ப் – புட்டின் : பேச்சுவார்த்தைக்கு தயார்

ட்ரம்ப் – புட்டின் : பேச்சுவார்த்தைக்கு தயார் 0

🕔13:13, 28.ஜூன் 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புட்டின் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ரஷ்ய ஜனாதிபதிக்கும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனுக்குமிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்தே அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு ரஷ்யா இணக்கம் வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
யேமனில் மோதல்களினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பலி

யேமனில் மோதல்களினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் பலி 0

🕔12:21, 28.ஜூன் 2018

யேமனில் இடம்பெறும் உள்நாட்டு மோதல்களினால் 10 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. யுத்த சூழ்நிலை மற்றும் பல்வேறு சித்திரவதைகளினால் சிறுவர்கள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சிக்கல்களை எதிர்கொண்ட பல சிறுவர்கள் மோதல்களின்போது உயிரிழந்துள்ளதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் யேமனிலுள்ள பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதற்கு சவூதி படையினருடன் இணைந்து, அந்நாட்டு பாதுகாப்பு பிரிவு

Read Full Article
பலஸ்தீனில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உதவ இந்தியா இணக்கம்

பலஸ்தீனில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உதவ இந்தியா இணக்கம் 0

🕔13:06, 27.ஜூன் 2018

பலஸ்தீனில் இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு உதவ இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் வேலைத்திட்டத்தினூடாக இந்தியா உதவ முன்வந்துள்ளது. இதற்காக 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை புதிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதற்கு ஒத்துழைப்பு வழங்க 20 நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளன. பலஸ்தீனில் தாக்குதல்கள்

Read Full Article
சீரற்ற காலநிலையினால் சீனாவில் இலட்ச கணக்கானோர் இடம்பெயர்வு

சீரற்ற காலநிலையினால் சீனாவில் இலட்ச கணக்கானோர் இடம்பெயர்வு 0

🕔16:33, 26.ஜூன் 2018

சீனாவின் தெற்கு பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையை அடுத்து குன்சி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒருஇலட்சத்து 24 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. யூனான் மாநிலத்திற்கும்

Read Full Article
ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்பு

ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்பு 0

🕔10:39, 26.ஜூன் 2018

கம்போடியாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த ஈக்குவடோரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். கம்போடியா எல்லைப் பகுதியிலுள்ள வனப்பகுதியில் குறித்த இருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கம்போடியாவில் ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி கடத்தப்பட்டனர். கம்போடியாவின் எல்லைப் பகுதியில் இடம்பெறும் மோதல் சம்பவங்கள் குறித்தான செய்திகளை வழங்கியமைக்காக

Read Full Article
மைதானத்தில் கால்பந்து விளையாடிய கங்காரு

மைதானத்தில் கால்பந்து விளையாடிய கங்காரு 0

🕔05:52, 26.ஜூன் 2018

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் பெண்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்து மைதானத்தை சுற்றி வந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். அதன் போது கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது விளையாடி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது. பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு

Read Full Article
புழுதிப்புயலினால் அன்றாட வாழ்க்கை பாதிப்பு

புழுதிப்புயலினால் அன்றாட வாழ்க்கை பாதிப்பு 0

🕔15:15, 25.ஜூன் 2018

சீனாவின் மொங்கோலியா மாநிலத்தில் புழுதி புயல் வீசியுள்ளது. சுமார் 15 நிமிடங்களுக்கு புழுதி புயல் வீசியதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 100 மீற்றர் உயரத்தில் வீசிய இப்புழுதி புயலினால் இப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இப்புழுதி புயல் வீசியதன் காரணமாக இப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர

Read Full Article
மீண்டும் எர்துவான் ஜனாதிபதியாகிறார்.

மீண்டும் எர்துவான் ஜனாதிபதியாகிறார். 0

🕔09:39, 25.ஜூன் 2018

துருக்கி ஜனாதிபதி தேர்தலின், நீண்ட காலமாக துருக்கியின் தலைவராக இருக்கும் ரிசெப் தயிப் எர்துவான் மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. “முழுமையான பெரும்பான்மையை அதிபர் ரிசெப் பெற்றுள்ளார்” என்று கூறிய தேர்தல் ஆணையத் தலைவர் சாதி குவென், வேறு எந்த தகவலையும் வெளியிடவில்லை. 99% வாக்குகள் எண்ணப்பட்டதில், எர்துவான் 53 சதவீத

Read Full Article
சவூதியில் தடை நீக்கப்பட்டது.

சவூதியில் தடை நீக்கப்பட்டது. 0

🕔17:30, 24.ஜூன் 2018

3 தசாப்தகாலத்திற்கு மேலாக சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் நீக்கப்பட்டுள்ளது.பெண்கள் கார் மற்றும் மோட்டார் வாகனங்களை செலுத்த முடியும்.பெண்கள் வாகன அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டதோடு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க