வூஹான் கொரோனா வைரஸ் COVID-19 ஆகா மாற்றம்

COVID -19  (கொரோனா) வைரஸ் தொற்றினால் ஒரே நாளில் 242 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று ஆரம்பத்தில் பதிவான ஹுபே மாகாணத்தில் நேற்றைய தினம் குறித்த உயிரிழப்புக்கள் பதிவானதாக சீன செய்தகிள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய வைரஸ் தொற்றுக்குள்ளாகி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 14 ஆயிரத்து 840 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதற்கமைய மொத்தமாக 60 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவுக்கு வெளியில் ஹொங்கொங் மற்றும் பிலிப்பைன்சில் ஒவ்வொரு உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. மலேசியா, தாய்வான், ஜப்பான், கொரியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகம் முழுவதும் 25க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில் அதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.


Back to homepage

Similar Photo Galleries