பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை

இலங்கை சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை ஜனாதிபதி  தலைமையில் திறப்பு..

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2015 ஆம் ஆண்டு சீனாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரச உதவியாக இவ்வைத்தியசாலை கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கை சீன பாரம்பரிய கட்டிட கலை அம்சங்களுடன் 16 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வைத்தியசாலை கட்டிட தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 1200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. முப்பது மாதங்களில் வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகங்களை பொருத்துவதற்கான நவீன வசதிகளுடன் கூடிய 5 சத்திரசிகிச்சை கூடங்களும் இதில் அடங்கியுள்ளன. 20 அதி தீவிர சிகிச்சை பிரிவுகட்டில்களும் 100 இயந்திரங்கள் கொண்ட இரத்த சுத்திகரிப்பு பிரிவும் இதில் அடங்கியுள்ளன. அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வு கூட வசதி, எஸ்ரே, சி.ரி.ஸ்கேன் சேவைகளும் நவீன கேட்போர் கூட வசதிகளும் இதில் அடங்கியுள்ளன. 300 வாகனங்களை சமகாலத்தில் நிறுத்தி வைக்க கூடிய வாகன தரிப்பிடமும் வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கும் விடுதி வசிதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நினைவு படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்தியசாலை கட்டிடத்தை திறந்து வைத்தார்.


Back to homepage

Similar Photo Galleries