இந்திய குடியரசு தலைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குமிடையில் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்றையதினமும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்று காலை இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு பயணித்த ஜனாதிபதி அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில் இந்திய குடியரசு தலைவரையும் இன்றையதினம் ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எதிர்கால திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குமென அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் இருநாட்டு தலைவர்களும் சந்தித்து கலந்துரையாடினர்.


Back to homepage

Similar Photo Galleries