அவுஸ்திரேலியாவின் காட்டுத்தீ

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக இடம்பெயர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் மெல்பேர்னில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்கள் 20 மணித்தியால கப்பல் பயணத்தின் பின்னர் மெல்பேர்னை அடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியிலிருந்து இதுவரை 4 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள 3 மாநிலங்கள் காட்டுத்தீ அனர்த்தத்தினால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பமான காட்டுத்தீயின் தாக்கம் இதுவரை குறைவடையவில்லை.

அனர்த்தத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் சுமார் 5 மில்லியன் ஹெக்டேயர் நிலப்பரப்பு தீக்கிரைகியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்தும் அவுஸ்திரேலிய மக்கள் காட்டுத்தீயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Back to homepage

Similar Photo Galleries