முள்ளிப்பொத்தானை பகுதியில் பாம்பு தீண்டி நபரொருவர் பலி 0
தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில், பாம்பு தீண்டி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 49 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். முள்ளிப்பொத்தானை பகுதியில், வயலில் வைக்கோல்களை சேகரித்துக்கொண்டிருந்த நிலையில், அவரை பாம்பு தீண்டியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதேவேளை வவுனியா சாளம்பைக்குளம் பகுதியில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான பெண்ணொருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப