அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய 15 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
காலியில் நடைபெறும் இலங்கை அணியுடான டெஸ்ட் போட்டியின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
இந்த மாத தொடக்கத்தில் சிட்னியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது 9999 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இந்நிலையில் இன்று (29) புதன்கிழமை ஆரம்பமான இலங்கையுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கினார் ஸ்மித். தான் எதிர்கொண்ட முதல் பந்தில் ஒரு ஓட்டத்தை எடுத்து டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டினார்.
ஆலன் போர்டர், ஸ்டீவ் வா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின்னர் இந்த சாதனையை எட்டிய நான்காவது அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது.