அனுராதபுரம் நுவரவௌ நீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுத்தப்படுத்தல் மற்றும் அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக நாளைய தினம் 21 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளை காலை 9 மணி முதல் மறுநாள் வியாழக்கிழமை மாலை 6 மணி வரை நீர்வெட்டு அமுலாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் கட்டமைப்பு – கலேத்தேவ, நெலும்கன்னிய, துரியன்குளம், கல்குளம். கவரக்குளம், வன்னம்மடுவ, குன்ச்சிகுளம், குருந்தன்குளம், மாத்தளை சந்தி, சாலிய மாவத்தை, கனகராயன்குளம், யாழ் சந்தி, பண்டா புளியன்குளம், தெப்பன்குளம், ஜயந்திகிராமம், சாலியபுரம், மான்கடவல, லிங்கல வீதி, கட்டமான்குளம்.
அனுராதபுரம் புதிய நகரத்தின் நீர் வழங்கல் கட்டமைப்பு – மஹிந்தலை நீர் வழங்கல் கட்டமைப்பின் கதுவடவீதி, ருவன்கம, வெல்லமொரான, தரியன்குளம், பலுகஸ்வௌ, சட்டம்பிகுளம், அம்பத்தலாகம, பொலிஸ் கிராமம், மஹிந்த ராஜபக்ஷ மாவத்தை, கிரின்தேகம, கன்னட்டிய மற்றும் குருந்தன்குளம் ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலாகுமென தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.