பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்றுடன் நிறைவடைந்தது.
இதில், முத்துக்குமரன் டைட்டில் வென்று பரிசுத்தொகை தட்டி சென்றார்.
\இதையடுத்து, அடுத்த பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்கின்ற தகவலை விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்பது தனி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்களாக கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.
ஆரம்பத்தில் கமல் பேச்சை கேட்பதற்கு என்றே, தனி ரசிகர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் டிவி முன் தயாராகி விடுவார்கள்.
ஆனால், கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனி வெளியேற்றப்பட்டதில், பலவிதமான சர்ச்சை எழுந்து, கமலை இணையவாசிகள் ட்ரோல் செய்தனர்.
இதையடுத்து, சீசன் 8 நிகழ்ச்சியில் விலகுவதாக கமல் தரப்பில் இருந்து அறிக்கை வெளியானது.
அதில், படங்களில் கால்ஷீட்டால், வரும் பிக்பாஸ் சீசனில் பங்கேற்க முடியாது என்ற காரணத்தை கூறி, விஜய் டிவிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
இதனால் அவருக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என கேள்வி எழுந்தது.
சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சொல்லப்பட்ட நிலையில், விஜய் சேதுபதி பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக விஜய் டிவி அறிவித்தது.
விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்றும் அவர் கமலை போல தொகுத்து வழங்குவாரா? என பலவிதமான கருத்துக்கள் எழுந்தன.
ஆனால் ஆரம்பமே அசத்தல் என்பது போல அறிமுக விழாவில் தனக்கான பாணியில் பேசி இரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
ஆனால், சில வாரங்கள் செல்ல செல்ல, அவர் மற்ற போட்டியாளர்களை பேச விடுவதில்லை என்றும் சுருக்கமாக பேசுங்கள் என்று சொல்லி போட்டியாளர்களை பேச விடாமல் தடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனால், அடுத்த பிக்பாஸ் சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில்;, கடந்த 7 சீசன்களிலும் இல்லாத வகையில் 8ஆவது சீசனில் தான் அதிகம் பார்வைகள் மற்றும் வாக்குகள் கிடைத்து இருக்கிறது என விஜய் டிவி நிர்வாகம் கூறி இருக்கிறது.
மேலும் விஜய் சேதுபதி தான் அடுத்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தொடர்வார் எனவும் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால், விஜய் சேதுபதி இரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.