புஸ்ஸலாவ நயப்பனை பகுதியில் உயிரிழந்த சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
மூன்று அடி நீளமான சிறுத்தையொன்று இறந்த நிலையில் கிடப்பதை பொது மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து இந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.
விலங்குகளை வேட்டையாடுவதற்காக போடப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி குறித்த சிறுத்தை உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த சிறுத்தையின் உடல் கம்பளை வனஜீவராசி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுவுள்ளதாக புஸ்ஸலாவ பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.